Close
நவம்பர் 22, 2024 6:22 காலை

மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்… சொல்லும் கதை..

இலக்கியம்

வீட்டின் முகப்பு அறையில் மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்.

எனது வீட்டின் முகப்பு அறையில் மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்..

உலக ஓவியர்கள் இன்றும் கூட வியந்து பார்க்கும் ஓர் அற்புத படைப்பு. இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின் விரலைத் தீண்ட, ஆதாம் உயிர் பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தின் மூலம் ஆதாமுக்கே அறிமுகமும் அடை யாளமும் தந்திருக்கிறார் மைக்கலாஞ்சலோ.

அழகிய வாட்டிகன் நகரத்தில் சிஸ்டைன் தேவாலயத்தில் பிரெஸ்கோ நுட்பமுறையில் படைக்கப்பட்டுள்ள ஓவியங் களுள் இது முக்கியமான ஒன்றாகும். இந்த ஓவியத் தின் மீதான பகுப்பாய்வு முழுக்க முழுக்க ஆன்மீக சார்ந்தது. நாத்திகவாதிகள் இந்த பதிவை கடந்து செல்லவும்.

பெரும்பாலான கிறிஸ்தவக் கலைஞர்களால் சித்தரிக்கப் படாத கடவுளின் உருவம், இங்கு சாதாரணமான ஒரு மனித னின் உருவத்தைப் போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பு.
வலிமை, துணிவு, மானுட இரக்கம், இளமை ஆகிய பண்புகள் இந்த ஓவியத்தின் மூலம் நன்கு காட்டப்பட்டுள்ளது.தேவர் களுடன் இருக்கும் கடவுள், ஆதாமிடம் கையை நீட்டி அவனுக்கு உயிர் கொடுக்கும் விதமும், ஆதாம் கடவுளை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டிருக்கும் நிலையும் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடவுளின் முதுமையும் ஆதாமின் இளமையும் நன்கு காட்டப்பட்டு, வலிமையும் உறுதியும் இந்த ஓவியத்தில் காணப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ இந்த காட்சியை துடிப்பான வண்ணங்கள் மற்றும் வியக்கும்படியான நுணுக்கமான விவரங்களுடன் வரைந்துள்ளார்.

இந்த படைப்பு ஆன்மீக இயல்புடையது, ஏனெனில் ஆதியாகமம் புத்தகத்தில் கடவுள் ஆதாமுக்கு உயிர் கொடுக்கும் தருணத்தை இது பிரதிபலிக்கிறது. கடவுளும் ஆதாமும் ஒருவரையொருவர் அணுகுகிறார்களா! அவர்கள் ஒருவரையொருவர் விட்டுவிடுகிறார்களா!! அவர்கள் ஒருவரையொருவர் நோக்கிச் சென்றால், அந்த உருவம் கடவுள் மற்றும் மனிதகுலத்தின் பரஸ்பர விருப்பத்தை பிரதிபலிக் கிறதா!!! என்பது போல நம்மை பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது.
அவர்கள் ஒருவரையொருவர் விட்டுவிடுகிறார்கள் என்றால், மைக்கேலேஞ்சலோ மனிதகுலத்தின் சுதந்திரத்தை அல்லது கடவுளிடமிருந்து பிரிந்திருப்பதை வலியுறுத்துகிறார் என கருதலாம்.

ஆதாமையும் கடவுளையும் கூர்ந்து கவனித்தால்.. இந்த ஓவியத்தின் இடது புறத்தில், ஆதாம் ஒரு கையை தரையில் ஊன்றி மற்றொரு கையை நீட்டியவாறு, தளர்வாக சாய்ந் திருப்பதைக் காண்கிறோம். சுவரோவியத்தின் வலது புறத்தில், கடவுள் பல உருவங்களால் சூழப்பட்டுள்ளார். ஆதாம் தரையில் ஓய்வெடுக்கும் விதத்தில் நிதானமாக தெரிகிறார். ஆதாமை இந்த செயலற்ற நிலைப்பாட்டில் காட்டிட, ஓவியர் இப்படி வரைந்திருக்கலாம்.

கடவுள் உண்மையில் அவருக்கு இன்னும் உயிரைக் கொடுக் கவில்லை என்பதைக் காட்டுவதற்காக என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஆதாமின், சோம்பேறித்தனமான தோர ணைக்கு மாறாக, கடவுள் ஒரு ஆற்றல்மிக்க, சுறுசுறுப்பான உருவம் போல் இருக்கிறார், அவர் தனது மிகப்பெரிய படைப்பில் கடினமாக உழைப்பது போல தெரிகிறது.

கடவுளைச் சுற்றியுள்ள உருவங்கள்.. ஒருவேளை தேவதூதர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட விவிலிய பாத்திரங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டிருக் கலாம். கடவுளின் இடது கை பெண்ணைச் சுற்றிக் கொண்டு குழந்தையைத் தொடுவதால், கடவுளின் இடதுபுறத்தில் உள்ள பெண்ணும் குழந்தையும் சிறப்பு கவனம் பெறுகிறது.

அந்தப் பெண் ஏவாளாக இருக்கலாம், அவள் கணவனுடன் பூமியில் அவதரிக்க போவதை எண்ணி எதிர்பார்த்து காத்தி ருக்கிறாள் என சொல்லலாம் அல்லது அந்தப் பெண் கன்னி மரியாளாகக் கூட இருக்கலாம். அந்த குழந்தை, குழந்தை இயேசுவாக இருக்கலாம். ஆதாம் விரைவில் பாவம் செய்வார் என்பதை அறிந்து பாராமுகமாய் வேறு பக்கம் பார்ப்பது போல் தெரிகிறது எனலாம்.
இப்படியாக.., மைக்கலாஞ்சலோவின் ஒரு ஓவியம், அனுமா னங்களின் அடிப்படையில் பல சிந்தனைகளை நமக்குள் உருவாக்குகிறது. நாம் சொன்னது யாவும் ஓவியர் சொல்ல முயன்றாரா என்பது கேள்விக்குறி. ஒரு படைப்பாளி சொல்ல எத்தனிப்பதை, பார்வையாளன் உள் வாங்கிக் கொள்வதும், படைப்பாளி நினைத்து பார்க்காத பரிமாணங் களை வெளி கொணர்வதும் தான் வீரியமான படைப்பிற்கான அழகு. அப்படியான படைப்புகள் தான் பல நூற்றாண்டுகளை கடந்தும் பேசப்படும்.

இங்கிலாந்திலிருந்து..சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top