Close
நவம்பர் 25, 2024 7:02 காலை

ராமானுஜன் ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதங்கள் கணித வரலாற்றில் மிகவும் பிரபலமானவை…

இலக்கியம்

ராமானுஜன் ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதங்கள் கணித வரலாற்றில் மிகவும் பிரபலமானவை

இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டிக்கு, இந்திய கணிதவியலாளர் ராமானுஜம்  எழுதிய கடிதம்..

அன்புள்ள ஐயா, மெட்ராஸில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவல கத்தின் கணக்குப் பிரிவில் குறைவான வருட வருமானத்தில் ஒரு எழுத்தராக வேலை செய்யும் நான் என்னை அறிமுகப் படுத்திக்கொள்கிறேன்.

எனக்கு இப்போது சுமார் 23 வயது. நான் பல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றிருக்கவில்லை, ஆனால் நான் சாதாரண பள்ளி படிப்பை முடித்துள்ளேன். பள்ளியை விட்டு வெளியே றிய பிறகு, நான் கணிதம் சம்பந்தமான வேலை செய்ய என் வசம் உள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்துகிறேன்.

பல்கலைக் கழகப் படிப்பில் பின்பற்றப்படும் வழக்கமான படிப்பை நான் தொடரவில்லை, ஆனால் எனக்கென்று ஒரு புதிய பாதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் கணிதத் தில் முடிவிலி சார்ந்து அதன் மாறுபட்டதொடர்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளேன், அதில் எனக்கு கிடைத்த முடிவுகள் உள்ளூர் கணிதவியலாளர்களை வியப்பூட்டும் படியாக இருக்கக்கூடும்.

மிக சமீபத்தில் உங்களால் வெளியிடப்பட்ட ஆர்டர்ஸ் ஆஃப் இன்ஃபினிட்டி என்ற ஒரு துண்டுப்பிரதியை பக்கம் 36 -இல் பார்த்தேன், அதில் கொடுக்கப்பட்ட எந்த எண்ணை விடவும் குறைவான பகா எண்களின் எண்ணிக்கைக்கு திட்டவட்ட மான வெளிப்பாடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்ற அறிக்கையை நான் கண்டேன். நான் ஒரு தீர்வை கண் டேன்,  இது கிட்டத்தட்ட உண்மையான முடிவுடன் தோரா யமாக ஒத்துப்போவது போல இருக்கிறது.

பிழை மிகக் குறைவு என எண்ணுகிறேன். அது சம்பந்தமாக இணைக்கப்பட்ட தாள்களைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கி றேன். எனது தேற்றங்களில் மதிப்புமிக்க அம்சங்கள் ஏதும் இருப்பதாக நீங்கள் உறுதியாக நம்பினால், எனது கோட்பாடு களை வெளியிட விரும்புகிறேன்.

நான் தீர்க்கமான முடிவையோ அதுசார்ந்த எண்ணங்களை யோ வெளிப்படுத்தவில்லை. ஆனால் நான் எந்த புள்ளியில் தொடங்கினேன் என்று விவரமாக குறிப்பிட்டுள்ளேன். நான் அனுபவமற்றவராக இருப்பதால், நீங்கள் எனக்குக் கொடுக் கும் எந்த ஆலோசனையையும் நான் மிகவும் மதிக்கிறேன். நான் உங்களுக்கு கொடுக்கும் சிரமத்திற்கு மன்னிக்கவும்,
தங்கள் உண்மையுள்ள,
எஸ். ராமானுஜன்
16.01.1913

முன் குறிப்பு:
ஜனவரி 16 மற்றும் பிப்ரவரி 27, 1913 இல் ராமானுஜன் ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதங்கள் கணித வரலாற்றில் மிகவும் பிரபலமான இரண்டு கடிதங்கள் எனலாம். இவை ராமானுஜரின் குறிப்பிடத்தக்க கணித கோட்பாடுகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்த வகை செய்தது மேலும் அதை தொடர்ந்து தொடர் ஆராய்ச்சியைத் தூண்டியது எனலாம்.

குறிப்பாக ஹார்டியின் பெரும் உதவியோடு ராமானுஜம் சிறந்த கணித கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளி யிட்டார். அவர்கள் இருவரும் இணைந்து அற்புதமான ஆவண ங்களை வெளியிட்டனர். கணிதத்துறையில் மைல் கல் எனலாம்..

மொழிப்பெயர்ப்பு: இங்கிலாந்திலிருந்து…சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top