Close
நவம்பர் 22, 2024 6:15 காலை

இந்திய கணிதவியலாளர் ராமானுஜத்துக்கு  இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டி எழுதிய பதில் கடிதம்..

இலக்கியம்

ராமானுஜம் கடிதத்துக்கு பதிவ் அனுப்பி ஆங்கிலேயர்

 இந்திய கணிதவியலாளர் ராமானுஜத்துக்கு  இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டி எழுதிய பதில் கடிதம்..

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கோட்பாடுகளை நான் மிகவும் ஆர்வத்துடன் கவனித்தேன். நீங்கள் செய்தவற் றின் மதிப்பை நான் சரியாக மதிப்பிடுவதற்கு முன், உங்கள் சில கூற்றுகளுக்கான ஆதாரங்களை நான் பார்க்க வேண்டி யது அவசியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் முடிவுகள் நான் அறிந்தவரை, புதியதாக மற்றும் சுவாரஸ்யமான முடிவுகளாக உள்ளன; முக்கியமான தாகவும் தோன்றும் இந்த முடிவுகள் எல்லாவற்றிலும் நீங்கள் பயன்படுத்திய ஆதார முறைகள் துல்லியமானதாக உள்ளது.

போதிய பயிற்சி இல்லையென்று நீங்கள் சொன்னாலும், இதுபோன்ற சுவாரஸ்யமான முடிவுகளை நீங்கள் கண்டுபிடித்ததற்கு எல்லா பெருமையும் உங்களை தான் சேரும். உங்கள் கோட்பாடுகளை ஏற்கனவே இருக்கிற கோ…
உங்களது சில சான்றுகளை விரைவில் எனக்கு அனுப்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும் உங்கள் ஓய்வு நேரத்தில் பகா எண்கள் மற்றும் மாறுபட்ட தொடர்கள் பற்றிய உங்கள் பணியை தொடரவும். நீங்கள் வெளியிடத் தகுந்த ஒரு பெரிய வேலையைச் செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது; திருப்திகரமான தரவுகளை உங்களால் தர முடிந்தால், என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்.

அதில் எனக்கு மகிழ்ச்சியே. உங்களின் சில முடிவுகளைப் பற்றி நான் எதுவும் தற்போது சொல்வதற்கில்லை, குறிப்பாக நீள்வட்டச் செயல்பாடுகளைப் பற்றி. இந்த பிரிவில் என்னை விட அதிக நிபுணத்துவம் வாய்ந்த மற்றொரு கணிதவி யலாளரிடம் ஒப்படைத்து, அவருடைய அபிப்ராயத்தை கேட்கலாம்.கூடிய விரைவில் உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
ஜி.எச். ஹார்டி
08 .02.1913

மொழிப்பெயர்ப்பு: சங்கர் இங்கிலாந்திலிருந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top