முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உங்களின் ஒருவன்..
இரண்டு நாள்களுக்கு முன் லண்டன் ஈஸ்ட்ஹாம் டிரினிட்டி உள் அரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி வாயிலாக புத்தக அறிமுக உரை நிகழ்த்தினார். விழாவில் துணை மேயர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பல தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர்.
விழாக் குழுவினர் எனக்கும் அழைப்பு விடுவித்திருந்தனர். ஒரு புத்தக பிரியனாக, வாசிப்பாளனாக நானும் கலந்து கொண்டேன். புத்தகத்தின் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாக அளித்தனர்.
புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் புரட்டினேன். என்னுரை,
பதிப்புரைக்கு பின்..”பிறக்கும் போதே ஒரு தலைவனின் மகனாகத் தான் நான் பிறந்தேன்” – என்கிற கம்பீரமான வரிகளுடன் தொடங்குகிறது.
336 பக்கங்களுடன் 27 அத்தியாயங்களை கொண்ட இந்த பதிப்பில் பல அரிய புகைப்படங்களும், சீரிய தகவல்களும் இருக்கின்றன. முதல் அமைச்சரின் அரசியல் உலக அனுபவங்களின் பகிர்வை மேலோட்டமாக வாசிக்கிற போதே, ஒரு தலைவனின் மகன் என்கிற தகுதி மட்டுமே தலைவனாவ தற்கு போதுமானதில்லை என்கிற புரிதலை நமக்கு தருகிற தகவல் பெட்டகம் என்பதையும், வாரிசு, சிபாரிசு என்கிற விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் தரவுகளை உள்ளடக்கிய சுயவரலாற்று பதிவு என்பதையும் உணர முடிகிறது.
முழுவதும் வாசித்து விட்டு பின்னொரு நாளில் சுயசரியதை பேசியதை விலாவாரியாக பேசலாம்.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋