Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

மருத்துவர் தெட்சிணாமூர்த்தியின் நூல்கள் அறிமுக விழா

புதுக்கோட்டை

அறந்தாங்கியில் நடந்த திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர், தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி எழுதிய நூல்கள் அறிமுக விழா

அறந்தாங்கியில் நூல்கள் அறிமுக விழா..

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி, ரஞ்சிதம் மஹாலில், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர், தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி எழுதிய  நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அறந்தாங்கி ஐஎம்ஏ  செயலாளர்  மருத்துவர்  இப்ராம் ஷா  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  கவிவர்மன், தமிழ் மாநில காங்கிரஸ் கொள்கை பரப்புச்செயலாளர்  கராத்தே கண்ணையன், ஆவுடையார்கோயில் துணை வட்டாட்சியர் ஜபருல்லா, KBSSC அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கைபரப்புச்செயலாளர்  நீலகண்டன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின், பொருளாதார கல்வி விழிப்புணர்வு இயக்க, மாவட்ட துணை அமைப்பாளர்  தொல்காப்பின், பாண்டி பத்திரம் பாரதநேசன் கணேசன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர் சேக், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் விகாஸ் சரவணன்.

மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, ஐம்பொன்னு அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஒய்வு பெற்ற தமிழாசிரியர் சேதுராமன், மணமேல்குடி வட்டார வள அலுவலர்  சிவயோகம் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

அரசியலும் ஆக்ஸிஜன்தான் – தொகுதி 1 நூலை புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞர்  வெங்கடேசன் அறிமுகம் செய்தார்.  நூலை ஜெயகுமார், மருத்துவர் விஜய் சிவானந்தம்,  சீனிவாசன்,  முபாரக் அலி, அண்ணாத்துரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கொரோனா காலச்சுவடு – தொகுதி 1 நூலை டாக்டர்  அஸாருதீன் அறிமுகம் செய்தார். டாக்டர் இப்ராம்ஷா,  அனு, கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன்,  சீதா விஸ்வம் மூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புதுக்கோட்டை
அறந்தாங்கி, ரஞ்சிதம் மஹாலில், நடந்த திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர், தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி  எழுதிய நூல்கள் அறிமுக விழா

இளமை கூட்டும் அழகுக்கலை மருத்துவ நவீன சிகிச்சைகள் நூலை, மூத்த தோல் நோய் மருத்துவர்  கிருஷ்ணராஜ் வெளியிட்டார். .கரேத்தே கண்ணையன், திசைகள் அமைப்பின் பொருளாளர்  முகமது முபாரக், ராவுத்தர்கனி, ஜெயலெட்சுமி,  தாஜுதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பேராவூரணி  மெய்ச்சுடர் வெங்கடேசன்,  சண்முகப்பிரியா, சற்குருநாதன்,ராஜேந்திரன், கபார்கான், அப்துல் பாரி,  ஜெயராஜ், தேவகோட்டை தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஆசிரியர் பாஸ்கரன், டாக்டர் கனிமொழி சரவண ஜோதி,  பெருமாள் நடராஜன்,  கணேசன்,  கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் ஜீ.வி.  சிறப்புரையாற்றினார். நூலாசிரியர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி ஏற்புரையாற்றினார்.

முன்னதாக  ஆண்டோ பிரவீன் வரவேற்றார். மணிமுத்து நன்றி கூறினார். நிகழ்வை  செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

தகவல்…ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top