Close
நவம்பர் 22, 2024 1:39 காலை

ஈரோடு மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் செப் 1-ம் தேதி ஊட்டச்சத்து மாத விழாவை கொடியசைத்து தொடக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் போஷன் அபியான் – தேசிய ஊட்டச்சத்து மாத விழா (Poshan Maa) -2022 செப்டம்பர் 1 முதல் 30 வரை நடைபெறுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடில்லாத இந்தியாவை உருவாக்குவதற் காக “தேசிய ஊட்டச்சத்து குழுமம்” மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகள் சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது, வளர் இளம் பெண்கள், தாய்மார்கள் ஆகியோர் இரத்த சோகையால் பாதிக்கப்படுவது போன்றவற்றை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் இந்த திட்டத்தை மத்திய அரசு 8 மார்ச் 2018 அன்று துவக்கியுள்ளது.

தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் – 2022 போஷன் அபியானின் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாகும். இம்மாதத்தில் செப்டம்பர் 1 தேதி முதல் 30 வரை ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இம்மாத தலைப்பு “ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை ஊக்குவித்தல்.”

ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 20 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி துவக்கி வைத்தார்.

ஈரோடு
ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் உறுதி ஏற்றுக்கொண்ட னர்

மேலும் மாவட்ட ஆட்சியரகம் முதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வரை தேசிய ஊட்டச்சத்து மாத விழா 2022 விழிப்புணர்வு  பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள், துணை இயக்குநர் சுகாதார பணிகள், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம், மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏகம் அறக்கட்டளை, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் நந்தா நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கெண்டனர்.

இதனை தொடந்து வட்டார அளவில் 15 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் தோறும் நேரடியாகவும் மற்றும் வாட்ஸ்ஆப் செயலி மூலமும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மாதம் முழுவதும் மாவட்ட, வட்டார மற்றும் அங்கன்வாடி மைய அளவில் தினசரி நடைபெறும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் விவரங்களை ஜன் அந்தோலன் இணையத்தில் (http://www.poshanabhiyaan.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஜே.சி.ஐ. ஈரோடு மெட்ரோ தொண்டு நிறுவனம் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊட்டச்சத்து பொருட்களை நன்கொடை வழங்கினர்.  ஏகம் அறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ராஜ்,ஈரோடு ஆல் தி சில்ரன் ஒருங்கிணைப்பாளர்  செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top