Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் “முதலுதவி தின விழா”

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த முதலுதவி நாள் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “முதலுதவி தின விழா” வில்முதலுதவியின் முக்கியத்துவம்  குறித்து  மழலையர் அறிந்து கொண்டனர்.

செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் “முதலுதவி வாரமாக” கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்கள் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மருத்துவர் வேடம் அணிந்து வந்து, முதலுதவி என்பது காயத்திற்கு கொடுக்கும் முதற்கட்ட சிகிச்சை என்றும் , அதே போன்று முதல் உதவி என்பது சில சமயங்களில் உயிர் காப்பற்றும் திறன்களை கொண்டது என்றும் வலியுறுத்தினர்.

அதுமட்டுமின்றி இந்த இளம் வயதிலேயே முதலுதவியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் முதலுதவிப்பெட்டியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்தும் மாணவர்கள் விளக்கமளித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது “ஒவ்வொருவர் வீட்டிலும் முதலுதவி பெட்டி” அவசியம் இருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் நாடகம் வாயிலாக வலியுறுத்தினர் மேலும் முதலுதவி பொருட்களின் வேடம் அணிந்து வந்தும் முதலுதவியின் அவசியத்தை உணர்த்தினர்

இந்த விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துணைமுதல்வர் குமாரவேல் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top