Close
நவம்பர் 22, 2024 4:29 காலை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள்

சென்னை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய சிறப்பு அறுவைச் சிகிச்சை அரங்குகளை திங்கள்கிழமை திறந்து வைத்து ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் (இடமிருந்து வலம்) கல்லூரி முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் தா.இளைய அருணா, ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் உள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கட்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக விபத்து விழிப்புணர்வு தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதன்மையர் டாக்டர் பி. பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது சுமார் ரூ. 4 கோடி செலவிலான நவீன உபகரணங் களுடன் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகம், சிறுநீரக மாற்று, ரத்த நாளம்,  புற்றுநோய்,  நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக் கான சிறப்பு அறுவைச் சிகிச்சை அரங்குகளையும், இதயவியல் துறையில் இருதய உட்பகுத்து ஆய்வகம் (கேத் லேப்), கண் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் கண்தான வங்கி உள்ளிட்டவைகளை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து சிறப்பு வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து உலக விபத்து மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு கையேடுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.  இந்த மாதம் ஓய்வு பெற உள்ள அறுவைச் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவக்குமார்,  ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் பூபதி மற்றும் ஊழியர்களுக்கு உள்ளிட்டோருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

38 அறுவைச் சிகிச்சை அரங்குகள்:
பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: ஸ்டான்லி மருத்துவமனையில் முன்பு 10 அறுவை சிகிச்சை அரங்குகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது இம்மருத்துவமனை யில் 38 அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பாட்டில் உள்ளன.

தற்போது ரூ.4 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதன் மூலம் தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக மட்டுமல்லாது, அதனைவிட சிறப்பான சிகிச்சையை ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்க முடியும்.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெற்று அந்த உறுப்புகளை நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக வசதியாக ஒருங்கிணைந்த சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம் இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள் ளது.

இதன் மூலம் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை யின் பயன் பன்மடங்கு அதிகரிக்கும்.   தானமாக உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சையில் மூலம் அகற்றுவதற்கு முன்பு 10 அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அதற்கான உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான உரிமம் வழங்கப்பட்டு ள்ளது. நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் அரசு மருத்துவமனை களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மையம் ஸ்டாலின் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

உலக அளவில் விபத்துகளில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் உயிரிழப்பு:
சாலை சாலை விபத்துகள் மூலம் உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவைப் பொறுத்தவரை விபத்துகளின் உயிரிழப்போ ரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4 லட்சம் பேர் என கணக்கிடப் பட்டுள்ளது.

விபத்துகள் அதிக அளவில் ஏற்படும் அபாயம் உள்ள பகுதி களைக் கண்டறிந்த உயிரிழப்போரின் எண்ணிக்கை யைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 228 அரசு மருத்துவமனைகள்,  445 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 673 மருத்துவமனைகளில் விபத்துகள் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல இந்தியாவை சேர்ந்த சர்வதேசத்தை சேர்ந்த எந்த நபராக இருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறுவது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். இத்திட்டத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும். சுமார் 1.21 லட்சம் பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்காக இதுவரை ரூ. 108 கோடி விபத்து காப்பீடு செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் புற்றுநோயை கண்டறியும் மெமோகிராபி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்பகப் புற்று நோயை தொடக்க நிலையிலையே கண்டறிந்து பெண் நோயாளிக ளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.

கண் தானத்தை ஊக்கப்படுத்தவும் இறந்தோர் கண்களில் இருந்து எடுக்கப்படும் விழி வெண் படலங்களை பாதுகாக்க வைக்கவும் ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ள கண் தான வங்கி உதவிகரமாக செயல்படும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சென்னை மாநகராட்சி நிலை குழு தலைவர் தா.இளைய அருணா, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு,  மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷ் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி, துணை முதல்வர் டாக்டர் ஜமீலா, அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top