Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

வாழ்க்கையை முடக்கிப்போடும் பக்கவாத நோய்… தேவை எச்சரிக்கை…

உலக பக்கவாத நாள்

2022, உலக பக்கவாதம் தின கருப்பொருள் மதிப்புமிக்க நேரம்

உலகம் முழுதும் பக்கவாத நோயால் 1.20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக மற்றும் நோய் தடுப்பு மருத்துவர் திருச்சி  வி.சி.சுபாஷ்காந்தி கூறியது:  மனிதனின் உடல் இயக்கத் தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனை யாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது.

விபத்து, காயம், மூளை ரத்தக்குழாயில் ஏற்படும் தாக்கம் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக்கசிவே ‘ஸ்டிரோக்‘ என்கிற பக்கவாதம்.

உலகம் முழுதும் சுமார் 1.20 கோடி மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கபட்டுள்ளனர். அதில் 50 லட்சம் மக்கள் பக்கவாதத் தினால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில்  6 கோடி பேர்  பக்கவாதத்தால் பாதிப்பு அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில் நம்மில் ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகளவில், மூளை பக்கவாதம் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாகவும், இயலாமைக்கான மூன்றாவது முக்கிய காரணமாகவும் மற்றும் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாகவும் உள்ளது.

இந்த பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சத்து ஆகியவை முக்கிய காரணங்க ளாகும்.

இந்த ஆண்டு 2022, உலக பக்கவாதம் தின  கருப்பொருள்  மதிப்புமிக்க நேரம்  என்பதாகும். மூளைதான் நம் உடம்பை செயல்பட வைப்பது. மூளை நரம்பு பாதிப்பதால் நம் கை, கால்கள் பாதிப்படைகின்றன. திடீரென்று அதிக தலைவலி, மயக்கம் வருவது, திடீரென்று கண் பார்வையை கருப்பாக மறைப்பது, மரத்துப்போதல், உணர்வற்றத் தன்மை போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள்.

உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அதேபோல, கை,கால்கள் பொறுமையாக செயல்படுகிறது என்றாலும் உடனடியாக ஸ்கேன் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான், ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? வெடித்துள்ளதா? என்பது தெரியும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை விரைந்து செயல்பட்டு சேர்த்து மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும், இயன்முறை சிகிச்சைகளுமே தொடர்ந்தால் தான் பக்கவாத நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு எழ முடியும்.

இந்நோய் பாதிப்பு வராமல் இருக்க சீரான இரத்த அழுத்தம் 120-80 இரத்தத்தில் பொதுவான சர்க்கரையின் அளவு 110,வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரையின் அளவு 100, சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு 140-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இரத்தத்தில் மொத்த கொழுப்பின் அளவு 200. அதிகமாகமலும், டிரைகிளிசரைடு கொழுப்பு 180-க்கு மிகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டால் மட்டுமே பக்கவாத பாதிப்பு வராது.

பக்கவாதத்தை தடுக்க தினமும் 45 நிமிட நடைபயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்ப தோடு உப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம் என்றார் சுபாஷ்காந்தி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top