Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

புதுக்கோட்டையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை

சிவபுரம் கற்பகவிநாயகா செவிலியர் கல்லூரியில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தங்கில் ரங்கோலி வரைந்த மாணவிகள்

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், திருச்சி அப்பல்லோ  மருத்துவமனை, கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை யூத் ரெட் கிராஸ் இணைந்து கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய ரங்கோலி வரையும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கமும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுமித்ரா தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் திருச்சி அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மருத்துவர் அஜய் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், புற்றுநோயானது உலகின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மேலும் அதன் சுமை அதிகரித்து வருகிறது.

2021 ஆம் ஆண்டில், உலகம் ஒரு நிதானமான புதிய வாசலைக் கடந்தது. 20 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 10 மில்லியன் பேர் இறந்தனர். வரும் பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும். இன்னும் அனைத்து புற்றுநோய்களும் சிகிச்சையளிக்கப் படலாம், மேலும் பலவற்றைத் தடுக்கலாம் அல்லது குணப் படுத்தலாம்.

இருப்பினும், புற்றுநோய்க்கான கவனிப்பு, மற்ற பல நோய் களைப் போலவே,  நமது உலகின் ஏற்றத் தாழ்வுகளையும் சமத்துவமின்மையையும் பிரதிபலிக்கிறது.  உயர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. விரிவான சிகிச்சையானது 90% க்கும் அதிகமான அதிக வருமானம் கொண்ட நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுக ளில் 15% க்கும் குறைவாக உள்ளது.

இதேபோல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழ்வு அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 80% க்கும் அதிகமாகவும், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 30%  க்கும் குறைவாகவும் உள்ளது. மேலும் ஐந்தாண்டுகளுக் குப்பிறகு மார்பகப்புற்றுநோயின் உயிர்வாழ்வு அதிக வருமானம் உள்ள நாடுகளில் 80% அதிகமாக உள்ளது. இது இந்தியாவில் 66% ஆக உள்ளது.

புற்றுநோயைக் கண்டறிதல் குடும்பங்களை வறுமையில் தள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது.  குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், கோவிட்-19 தொற்று நோய்களின் போது அதன் விளைவு தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் “கவனிப்பு இடைவெளியை மூடுவது” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜா வாழ்த்திப் பேசினார். விழாவில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார்,  இளையோர் செஞ்சிலுவைச்சங்க புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் தயாநிதி சங்க பொருளாளர் முகம்மது அப்துல்லா.

மருத்துவர் இளையபாரதி, முன்னிலை வகித்தார்கள் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் யோகேஸ்வரன், சங்கர், தங்கராஜா, பொறியாளர் கலியக்குமார், நாகராஜன், அருள்முருகன், அப்பல்லோ மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் தனவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய ரங்கோலி 20 மாணவிகள் வரைந்தனர்.  அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது  நிகழ்வில் மருத்துவம் என்பது பிசினஸ் இல்லை மக்களுக்கான சேவை என்று கூறி இலவச மருத்துவ சேவை செய்த திருச்சி புற்றுநோய் மருத்துவருமான டாக்டர் ஜெயபால்  காலமானதை யொட்டி  அவருக்கு  ஒரு நிமிடம் நினைவஞ்சலி செலுத்தப் பட்டது.  முன்னதாக பேராசிரியர் ராதா வரவேற்றார். நிறைவாக துணை பேராசிரியர் விகிதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top