Close
நவம்பர் 22, 2024 6:43 காலை

இந்தியாவில் 7.70 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சர்க்கரை நோய் நிபுணர் கே.ஹெச். சலீம் தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற உலக சர்க்கரை நோய் தின முகாமில் விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கிய சர்க்கரை நோய் நிபுணரும் மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான கே.ஹெச். சலீம்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும்  உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

உலக சுகாதார மையம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு இணைந்து இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த பேண்டிங் என்ற விஞ்ஞானி பிறந்தநாளான நவம்பர் 14 -ஆம் தேதியை உலகமெங்கும் உலக சர்க்கரை நோய் தினம்  அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில், சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

இந்தியாவில் 7.70 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு: 

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.ஹெச்.சலீம் முகாமை தொடக்கி வைத்துப் பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு (IDF) அறிக்கையின்படி உலகளவில் 46.30 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இது 2045-ல் 70 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவ தற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 10 பேரில் ஒருவருக்கு இன்று சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தியாவில்  7.70 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த எண்ணிக்கை இன்னும் 25 வருடங்களில் 13.40 கோடியாக உயருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின் றன.  இந்த வருட விழிப்புணர்வாக 2022 IDF & WHO THEME  சர்க்கரை நோய் பற்றிய கல்வியறிவு நாளைய பாதுகாப்பு என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளைத் தடுக்கவும் இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் உலகளவில்  நடைபெற்று வருகிறது.

சிகிச்சையை முறையாக செய்வதும், உடல் நிலையை மருத்துவரின் அறிவுறுத்தலோடு தொடர்ந்து கண்காணித்து வருவதும், ஒரு சர்க்கரை நோயாளியின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகின்றன. சர்க்கரை நோயை அலட்சியம் செய்யாமல் நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்வை இனிதாய் வாழலாம்.

உணவுக்காட்டுப்பாடு மிகவும் அவசியம்:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். சிறந்த உணவு முறை என்பது குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட அளவு உண்பதே. நடை எடை உயரம். வேலையின் தன்மையை பொறுத்து உணவு பரிந்துரைக்கப் படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல் அளவுடன் நேரம் தவறாமல் உண்ண வேண்டும். விரதம் மற்றும் விருந்தை தவிர்க்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்களின் உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும்.
தாவரப்புரதங்கள் அடங்கிய பச்சைப்பயறு, காரமணி, பட்டாணி. மொச்சை போன்ற முழு பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.நார்ச்சத்துள்ள உணவு வகைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் முழு தானியங்கள், பயறு வகைகள் முக்கியமாக பச்சைப்பயறு, கொள்ளு போன்றவை, காய்கறி, கீரை வகைகள் இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கப் பயன்படும். பச்சைக் காய்கறிகளையும் கீரைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.

கிழங்கு வகைகளை அறிவுரைப்படி உண்ண வேண்டும். இரத்தத்தில் அளவிற்கு மேல் உடல் எடை உள்ளவர்கள். தினமும்  உண்ணும் உணவின் கலோரியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  இடைப்பட்ட நேரத்தில் உண்ணக்கூடிய உணவு வகையான மோர், தக்காளிச் சாறு, சூப், முட்டைக் கோஸ். தக்காளி, வெள்ளரிக்காய் வெங்காயம், வெள்ளை முள்ளங்கீ சாலட் போன்றவற்றை கூடுமான வரையில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேழ்வரகு, கோதுமை. அரிசி போன்றவற்றை தோசையாக வோ, ரொட்டி, சப்பாத்தியாகவோ சாப்பிடலாம். களி கஞ்சி யாகவோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டால் சீக்கிரம் ஜீரணித்து பசியை தூண்டும். கோதுமை மட்டுமே உணவு என நினைக்க வேண்டாம்.

புதுக்கோட்டை
புதுரை டீம்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற உணவுப் பொருள்கள் கண்காட்சி

நடைப்பயிற்சி  அவசியம்: 

தினமும் உடற்பயிற்சி, நடப்பதால் மனம், உடல் இரண்டும் திடமாக இருக்கும்.மனக்கவலை, மனவருத்தம், மன உளைச்சல்,  ஆத்திரப்படுதல் குறையும்.எடை குறையும்.இரத்த த்தில் சர்க்கரை அளவு குறையும். இரத்தக் கொதிப்பு குறையும்  (உயர் இரத்த அழுத்தம் குறையும்).

கொழுப்புச் சத்து குறைய பயன்படுத்தும் மாத்திரைகள் அளவு குறையும். இன்சுலின் ஊசி அளவும் குறையும். இவற்றிற்கான மருத்துவ செலவும் குறையும். தினமும் 25 நிமிடம் நடக்கலாம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம். நடத்தல் அனைவருக்கும் ஏற்ற சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

அதிக எடை தூக்காதீர்கள். மிகவும் கடினமாக உடற் பயிற்சிகள் செய்ய வேண்டாம். இருதயம், கண், சிறுநீரகப் பாதிப்பு உடையவர்கள் குனிந்து செய்யும் உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. மருத்துவரைக் கலந்தாலோசித்தப்பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தினமும் நடக்க வேண்டும்  /உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
படிப்படியாக நடக்கும் தொலைவை அதிகரிக்க வேண்டும். அதேபோல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்ய இதில்  நீண்ட நேர உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க கைவசம் குடிப்பதற்கு ஏதாவது ஒரு பழச்சாறு, காபி, டீ.  சர்க்கரையுடன் வைத்திருக்கலாம்.
நடப்பது, உடற்பயிற்சி நிறுத்திவிட்டால் அதனால் ஏற்படும் நன்மைகைள்  கிடைக்காமல் போய்விடும். எனவே தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்றார் டாக்டர் கே.ஹெச் சலீம்.

இதையொட்டி உணவுக் கண்காட்சி மற்றும் சர்க்கரை நோயின் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு மக்களுக்கு சர்க்கரை நோயின் அபாயம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் கால் நரம்பு பாதிப்பை கண்டறிய (Biotesiometer) மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

உணவுக் கண்காட்சி ஏற்பாடுகளை மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மகாலெட்சுமி செய்திருந்தார். மருத்துவமனை பொது மேலாளா ஜோசப்  நன்றி கூறினார்.

முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபாரதி  செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top