Close
நவம்பர் 22, 2024 6:37 காலை

வாரம்தோறும் சர்க்கரை நோய்க்கான இலவச ஆலோசனை முகாம்: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை அறிவிப்பு

ஈரோடு

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இலவச சர்க்கரை நோய் ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது.

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் வாரம் தோறும் புதன்கிழமை சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்படுமென மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநர், சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரவணன், தங்கவேலு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தங்கவேலு ஆகியோர் கூறியதாவது:

உலக சர்க்கரை தினம் ஆண்டுதோறும் நவ.14 -ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், மக்களிடையே சர்க்கரை நோயின் பாதிப்பு தன்மையும், அதற்கான சிகிச்சை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.

நாட்டில் உள்ள 100 சதவீத மக்களில் 30 முதல் 40 சதவீதம் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சர்க்கரை நோயை தொடக்க கட்டத்திலேயே நல்ல ஒரு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், அந்நோயால்   உடலில் மற்ற உறுப்புகள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

சர்க்கரை நோய் ஏற்பட்டால் உடலில் முதலில் இருதயம் பாதித்து, மாரடைப்பு வரும். தொடர்ந்து, கண்ணில் பார்வை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளையில் ரத்த குழாய் அடைப்பு, ரத்த கசிவு ஏற்படும். 30 சதவீதம் சர்க்கரை நோய் இருப்பவர் கள் ஏதாவது ஒரு கட்டத்தில் சிறுநீரக செயல்பாடு குறையும் வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் குறித்தும், நோய்க்கான மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று இலவசமாக நடத்தி வருகிறது. இந்த மருத்துவ ஆலோசனை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top