Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

உலக எய்ட்ஸ் நாளை… தஞ்சையில் எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர்

உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு தஞ்சையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ்  நாளை முன்னிட்டு  எச்.ஐ.வி-எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (01.12.2022)கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2022ம் வருடத்திற்கான கருப்பொருள் “சமப்படுத்துதல்” (Equalize) என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழிஏற்பு, ஆட்டோ ஸ்டிக்கர் ஓட்டுதல், சமபந்தி போஜனம், கலைநிகழ்ச்சி. பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஊட்டசத்து உணவு வழங்குதல் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை வழங்குதல்  மற்றும் கையெழுத்து  பிரசாரம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில் இன்று தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகில் உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. உலக எய்ட்ஸ் நாள் பேரணியில், புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் பள்ளி, பான் செகர்ஸ் மகளிர் கல்லூரி, தூய வள்ளலார் பொறியியல் கல்லூரி,பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம்,பாரத் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரி, தேசிய உணவு தொழில் நுட்ப மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றைச் சார்ந்த செஞ்சுருள் சங்க மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 1000 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி-எய்ட்ஸ் தடுப்புபணிகள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்.

அரசுஆரம்ப சுகாதார சுகாதார நிலையங்களில் 30 ஒருங்கிணைந்த ஆற்றுப் படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்குஎச்.ஐ.வி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்று உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும் எச்.ஐ.வி- எய்ட்ஸ் முதல்கட்ட பரிசோதனையானது 77 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது.

நோய் தொற்று உறுதி செய்பப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசுமாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் ஆகிய இரண்டு மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசுமருத்துவமனை ஓரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர் மற்றும் திருவையாற்றில் இணை கூட்டுசிகிச்சை மையத்திலும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

எச்.ஐ.வி- எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் CD4Count, தொடர் கூட்டுசிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு  FViral loadvd  என்னும் உயர் பரிசோதனை மூலம் கண்காணிக்கப் படுகிறது. 29 சுகவாழ்வு மையங்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் செயல்பட்டுவருகிறது.

தஞ்சை மாவட்ட தலைமை மருத்துவமனை,  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்த வங்கிகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனை,  கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் இலக்கு மக்களுக்கான திட்டங்கள் மற்றும் எச்.ஐ.வி-எய்ட்ஸ் தடுப்புப் பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி-எய்ட்ஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட 100 நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. எச்.ஐ.வி-எய்ட்ஸ்  தொற்றால்  பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2000- முதல் ரூ.10000- வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2021-22ம் ஆண்டின் 131 குழந்தைகளுக்குரூ.41300- வழங்கப்பட்டுள்ளது. என்று மாவட்டஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன்,  மாநகர நல அலுவலர் வீ.சி. சுபாஷ்காந்தி, போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் (சுகாதாரம்) நமச்சிவாயம், ரெட்கிராஸ் மாவட்டநிர்வாகிகள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top