புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துபட்டியில், மீனாட்சி முத்துராமன் நினைவாக நற்சாந்துபட்டி சமூகநல அறக்கட்டளைமற்றும் கோவிலூர் காணல் கண்மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவசகண்சிகிச்சை முகாமானது நன்முறையில்நடைபெற்றது.
முகாமில், நற்சாந்துபட்டியை சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் கண்பார்வை திறன், கண்அழுத்தம், கண்களில் தூசுமற்றும் பிறபொருள்கள் படிந்து இருந்தால் அகற்றுதல், கண்ணாடி தேர்வு பிரிவு மற்றும் மருந்துகொடுக்கும் பிரிவுஎனப்பல பிரிவுகளாகமருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் தன்னார்வலர்களும் பணியாற்றினர்.
இந்தமுகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் அ.முத்துராமன் செட்டியார்-அலமேலுமுத்துராமன் மற்றும் நற்சாந்துபட்டி சமூகநலஅறக்கட்டளை உறுப்பினர்களும்செய்திருந்தனர். இந்தமுகாமிற்கு சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இரத்தசர்க்கரை அளவு கண்டறியப்பட்டு, அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இதில்கண்சம்பந்தப்பட்டஅனைத்துநோய்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு, அதற்குரிய கண்ணாடி களும் இலவசமாக வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு, இதயசுருள் படமும் எடுக்கப்பட்டது.
இந்த முகாமின் துவக்கவிழாவில், நற்சாந்துபட்டி சமூகநல அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் டத்தோ லெ. மெய்யப்பன்செட்டியார் தலைமை வகித்து பேசியதாவது: நமது அறக்கட்டளை மூலம் மக்களுக்கும், நமது சமூகத்திற் கும் பலநற்செயல்களை செய்வதாக திட்டமிட்டுள்ளோம் .எனவே மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றுகூறினார்.
அறக்கட்டளையின் உறுப்பினரும், இந்த முகாமின் தலைவ ருமான அ.முத்துராமன் செட்டியார் பேசுகையில், இந்த முகாமானது எதிர்பார்த்த அளவைவிட நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது எனது துணைவியார் மீனாட்சிஆச்சி நினைவாகநடைபெறுகிறது. அவர்கள் இருக்கும் காலத்திலேயே மக்களுக்கு இதுபோல் நல்ல பலகாரியங்களை செய்து வந்தார். அவர் தற்பொழுது மறைந்தும் எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் எனகூறினார்.
விழாவில் அறக்கட்டளையின் தலைவர் கும.பெரி.சாத்தப்பன் செட்டியார் பேசுகையில், முகாமுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.நாங்கள் இந்த முகாமிற்கு முன்பதிவு செய்ததை விட கூடுதலாக மக்கள் வந்துஎங்களுக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளதால் மற்றொரு முகாமை விரைவில் நடத்ததிட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். முகாமிற்கு வந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், மதியஉணவும் வழங்கப்பட்டது.