Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு ஒரே நாளில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..

ஈரோடு

ஈரோடு அபிராமி கிட்னி கேர் சென்டருக்கு மாற்று அறுவைச்சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்த ஒரு நோயாளி கல்லீரல் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டு, கல்லீரல் தானம் வேண்டி ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவம னையின் மூலம் தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்தார்.

அவருக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகள் உள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, அவருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் கல்லீரல் தானமாக பெற தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து ஆம்புலன்சு மூலம் ஒரு மணி நேரத்தில் கல்லீரல் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு, அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குநரும், சிறுநீரக சிறப்பு மருத்துவருமான டாக்டர் சரவணன் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர் கள் தலைமையில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 25வயது நபர் ஒருவர், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் டயாலிசிஸ் மேற்கொண்டு வந்தார். இவரும், தமிழநாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில், சேலம் அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 25 வயது வாலிபரின் சிறுநீரகம், தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை யில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு, மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை பெற்று டாக்டர் சரவணன் தலைமையில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இந்த இரண்டு நோயாளிகளுக்கும் தற்போது நலமாக உள்ளதாகவும், இந்த இரண்டு அறுவை சிகிச்சைக்களும் ஒரே நாளில் செய்யப்பட்டதாகவும், இது அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுவதாக டாக்டர் சரவணன் தெரிவித்தார். இரண்டு நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களும் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top