Close
நவம்பர் 22, 2024 2:03 மணி

அகில இந்திய இருதய மருத்துவர்கள் சங்க மாநாடு சென்னை தொடக்கம்

சென்னை

அகில இந்திய இருதய மருத்துவர்கள் சங்கத்தின் 74 ஆம் ஆண்டு மாநாடு சென்னையில் தொடங்கியது

கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் அகில இந்திய இருதய மருத்துவர்கள் சங்கத்தின் எழுபத்தி நான்காம் (74) ஆண்டு  மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் டிசம்பர் 8 முதல் 11 வரை நடைபெறுகிறது.

இந்தியாவில் நிகழும் இருதயத் துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்கங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த மாநாடு டிசம்பர் 8 ஆம் தேதி மாலை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் துவக்க பட உள்ளது.

இந்த மாநாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு புத்தகத்தையும் வெளியிட உள்ளார்.

இந்த நான்கு நாள் மாநாட்டில் இருதயத் துறை பற்றிய பல்வேறு ஆய்வு கட்டுரைகள் ஆராயப்பட உள்ளது.இந்த மாநாட்டில் உலகெங்கிலுமுள்ள 2500 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

தமிழகத்தி்ல் இருந்து மட்டும் 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.இந்த மாநாடு இருதய நோயின் அடிப்படை தன்மை, உருவாகும் விதம், அதை தடுக்கும் முறைகள் மற்றும் நவீன சிகிச்சை வழிகளைப் பற்றி ஆராய உள்ளது.

இந்த மாநாட்டின் போது, இதய நிபுணர்கள் தங்கள் அனுபவங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் விவாதிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் இருதய நோயை தவிர்க்கும் முறைகளை பற்றிய அறிவியல் சார்ந்த கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

இருதய நோயை தவிர்க்கும் வழிகளை கண்டறியும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீரணியும் மற்றும் ஒரு சிறப்பு பாடலும் வெளியாக உள்ளது.

மாபெரும் கனவோடு ஒரு மகத்தான பயணம் என்ற கொள்கை முழக்கத்தோடு இதய நோயை வெல்லும் இலக்கை கருவாக கொண்டு, இந்த மாநாடு அமைந்திருப்பதாக அமைப்பு குழுவின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ரவி , செயலர் டாக்டர்.கண்ணன்  ஆகியோர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top