Close
ஏப்ரல் 5, 2025 11:47 மணி

புதுக்கோட்டையில் தேசிய சித்த மருத்துவ நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சித்த மருத்துவமனையில் நடைபெற்ற அகஸ்தியர் பிறந்தநாள் விழா

உலகின் தொன்மையான மருத்துவமான சித்த மருத்துவம் தோன்ற காரணமாயிருந்த ஆதிசித்தர் அகத்தியர் பிறந்த நாளான மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி,  புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவ பிரிவில் 6 -ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் இன்று (9-1-2023) கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ மனை சித்த மருத்துவர் சரவணன், ஆயுர்வேத மருத்துவர் மீனாகாந்தி, யோகா மருத்துவர் கீதா, மருந்தாளுநர்கள் ரெனிதா, பெனாசிர் மும்தாஜ், சுப்பையா, கனகரெத்தினம், தேவி அருண்குமார்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலக பணியாளர்கள் மாரியம்மாள், சரவணன், பாலசுப்ரமணியன், சிகிச்சை உதவியாளர் பிருந்தா, மருத்துவமனை பணியாளர்கள் வெங்கடாசலம், கலா, சக்திவேல், ரவிக்குமார் மற்றும் டாம்ப் கால் நிறுவன பணியாளர்கள் , சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜா மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி சித்த மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செய்தி குறிப்பு அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top