புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது.
புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய தொடர் மருத்துவ கருத்தரங்கு புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க விழா அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
நிகழ்வில் மதுரை தேவதாஸ் மருத்துவமனை மருத்துவப் பிரிவு சிறப்பு இருதய அறுவை சிகிச்சை மருத்துவ டாக்டர் .மீனாட்சிசுந்தரம் இருதய அறுவைச்சிகிச்சையின் புதிய நடைமுறை தொழில் நுட்பங்களை திரை மூலம் விளக்கமளித்து அவர் பேசுகையில், இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை தீவிர கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், அதிதீவிர இரத்தக் குழாய் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு உள்ளிட்ட பல உறுப்பு பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சை முறையாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது.
மாதக்கணக்கில் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய நிலை மாறி, நவீன கருவிகள் மூலம் நுண்,துளை அறுவை சிகிச்சைகள் சிறு தழும்புகள் ஐந்து ஆறு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதையும், பதினைந்து நாட்களில் குறிப்பிட்ட நோயாளிகள் பணிக்கு திரும்புவதையும் சாத்தியமாக்கி உள்ளன. ரோபோ மூலம் பைபாஸ் அறுவை சிகிச்சைகள், வால்வு அறுவை சிகிச்சை தொழில் நுட்பங்கள் வந்து விட்டன.இன்னும் ஐந்து வருடங்களில் இவை தமிழகத்தின் கடைக்கோடி சாமானிய மக்களையும் சென்றடையும் என்றும் குறிப்பிட்டார்
தேவதாஸ் மருத்துவமனை சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் நிபுணர் நிஜாமுதீன் பங்கேற்று பல்வேறு மருத்துவ குறிப்பேடுகளை திரை மூலம் விளக்கமளித்தார். புதுக்கோட்டை மூத்த மருத்துவர். பார்த்தசாரதி ஆஸ்மா நோய் பற்றிய அறிகுறிகள் சிகிச்சை முறைகள் குறித்து வீடியோ திரை மூலம் விளக்கமளித்தார்.
நிகழ்வில் மருத்துவர்கள் சாரதா மணி, ரவிக்குமார், வெண்ணிலா பெரியசாமி, சரவணன், வெங்கடேசன், நவரத்தினசாமி, சலீம், அப்துல்குத்தூஸ், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் டாக்டர் ராஜா, ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு மூத்த மருத்துவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரையும் கிளைச் செயலாளர் டாக்டர் முகமது சுல்தான் வரவேற்றார். நிறைவாக இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மதுரை தேவதாஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் செய்திருந்தனர்.