புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வாராப்பூர் அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது.
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வாராப்பூர் உயர் நிலை பள்ளியில் நடைபெற்றது.
முகாமுக்கு, பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். துணை ஆளுநர் பேராசிரியர் கருப்பையா முன்னிலை வகித்தார். அனைவரையும் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
கண் பரிசோதனை முகாமில்500க்கும் மேற்பட்டோர் கண் மருத்துவர்களிடம் பரிசோதனைசெய்துகொண்டனர் இதில்100க்கும் மேற்பட்டோர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிக்சைக்குஅழைத்து செல்லப்பட்டனர்.
புதுக்கோட்டைஆதிகாலத்து அலங்கார மாளிகை அருண், ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ் குமார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், துணை ஆளுநரும் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினருமான பேராசிரியர் கருப்பையா, பொருளாளர் ராஜேந்திரன்,
பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமுன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் செந்தில், ஆர். கருணாகரன், ரவி, மகாத்மா ரவிச்சந்திரன், பாஸ்கர், பன்னீர் செல்வம் , வெங்கடேஷ், புதுக்கோட்டைஆதிகாலத்து அலங்கார மாளிகை பணியாளர்கள், மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனை ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன்மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.