Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

மியாட்‌ மருத்துவமனை 24-வது ஆண்டு விழா: சாதனை ஊழியர்களுக்கு கிருத்திகா உதயநிதி விருது

சென்னை

சென்னை மியாட் மருத்துவமனை விழாவில் பங்கேற்ற கிருத்திகா உதயநிதி

சென்னை, மியாட்‌ இன்டர்நேஷனல்‌ மருத்துவமனை அதன்‌ 24-வது நிறுவனர்‌ தினத்தைக்‌ கொண்டாடியது.

1999-ஆம் ஆண்டில் ஓர் எலும்பியல் மறறும்‌ விபத்து சிகிச்சை மருத்துவமனையாகத்‌ தொடங்கி தற்போது 63-க்கும்‌ மேற்பட்ட சிறப்புப்‌ பிரிவுகளை உள்ளடக்கிய புகழ்பெற்ற மல்டி -ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக விரிவடைந்துள்ளது என்று அதன்  தலைவர்  மல்லிகா மோகன்தாஸ் தெரிவித்தார்.

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கிருத்திகா உதயநிதி முதன்மை விருந்தினராகக்‌ கலந்து கொண்டு  வாழ்த்தினார்‌.

அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றிய முன்மாதிரியான ஊழியர்களுக்கு 2022-ஆம்‌ ஆண்டின்‌ சிறந்த ஊழியர்‌ விருது மற்றும்‌ பியாண்ட்‌ தி கால்‌ ஆஃப்‌ டியூட்டி விருதுகளையும்‌ வழங்கினார்.

வெள்ளி விழா ஆண்டை நோக்கிச்‌ செல்லும்‌ இந்த வேளையில்‌, அடுத்து வரும்‌ தலைமுறைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும்‌ வாக்குறுதியை மருத்துவமனை தொடர்ந்து உறுதிப்படுத்துகிறது என்று இயக்குனர் டாக்டர் பரித்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.

இந்தியாவில்‌  அண்மைக்கால சுகாதாரப்‌ பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை அறிமுகம்‌ செய்வதில்‌ மியாட்‌  மருத்துவமனை எப்போதும்‌ முன்னோடியாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று போன்ற முன்‌ எப்போதும்‌ காணப்படாத சவால்கள்‌ கூட இம்மருத்துவமனையின்‌ முயற்சிகளுக்கு ஒரு தடையாக இல்லை.

உலகத்தரம்‌ வாய்ந்த கொரோனா சிகிச்சையை உன்னிப் பாகத்‌ திட்டமிட்டு வழங்குவது மற்றும்‌ சிறப்பு ஏற்பாடுகள்‌ மூலம்‌ சர்வதேச நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது என இருமுனைத்‌ திட்டத்தை இம்மருத்துவமனை பின்பற்றியது.

அதே நேரத்தில்‌ சுகாதாரப்‌ பாதுகாப்பில்‌ பல முதன்முறை அம்சங்களையும்‌ தொடர்ந்து அறிமுகப்படுத்தியது. 2022-ஆம்‌ ஆண்டில்‌, மியாட்‌ ல்‌ ரியல்‌ -டைம்‌ இன்ட்ரா -ஆப்ரேட்டிவ்‌ ஃபுல்‌-பாடி மொபைல்‌ சிடி ஸ்கேன்‌ (முழு உடல் பரிசோதனை) வசதி, தமிழ் நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம்‌ செய்யப்பட்டது என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top