Close
நவம்பர் 22, 2024 1:55 மணி

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை.யில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை

தஞ்சாவூர்

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை.யில் நடந்த பரப்புரையில் பேசிய ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமையில் (17.02.2023 ) நடைபெற்றது

அதில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவுதமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000 மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில்  நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன்  தமிழ்நாடு நவீனமடைந்தகதை என்ற தலைப்பிலும் கவிஞர் நந்தலாலா  அகப்பொறியின் திறவுகோல் – கேள்விகளின் சிறப்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்

உலகின் பல்வேறுபகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுக ளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.

தஞ்சாவூர்
பயிலரங்கில் பங்கேற்றவர்கள்

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் – நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி,பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும்  திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழி வாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆகவே, நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாவட்டஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கவிஞர்மனுஷ்யபுத்திரன், கவிஞர் நந்தலாலா, முனைவர்.பேராசிரியர் சி.செந்தமிழ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செ. இலக்கியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  க.பிரேமலதா, வட்டாட்சியர் சக்திவேல் , வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர்  பிரசுந்தநாயகி, முத்துக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top