Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

சிவகங்கை மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்

சிவகங்கை

சிவகங்கையில் ஆட்சியர் மதுசூதனரெட்டி தலைமையில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவைக்கூட்டம்

மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது: தமிழக மக்களின் நலன் காக்கின்ற வகையில், அவர்களின் உடல் நலத்தினை பேணி காத்திடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யின் மூலம் பல்வேறு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்.

தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு என்பது தேசிய அளவில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் சுகாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர்கள் எடுத்துரைத்து, பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட சுகாதாரப் பேரவை நிகழ்ச்சி, வருடந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 2-ஆவது மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம்  நடைபெறுகிறது. கடந்தாண்டில் நடைபெற்ற,  இந்நிகழ்ச்சியின் வாயிலாக  மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள்,

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் துணை சுகாதார நிலையங்கள், நகர துணை சுகாதார நிலையங்கள் ஆகியவைகளில் மேம்படுத்த வேண்டிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து, எடுத்துரைக் கப்பட்டு அதற்கான பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் சராசரியாக மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, அவ்வளாகத்தில் மருத்துவக் கட்டிடம் இப்பிரிவிற்கென ஏற்படுத்தும் பொருட்டு, ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்கென தமிழ்நாடு முதலமைச்சர், காணொலிக்காட்சியின் வாயிலாக விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, சங்கராபுரம், வேலங்குடி ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கென நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, அதன் முதற்கட்டமாக சங்கராபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு தற்போது ஆணை வரப்பெற்றுள்ளது.

இதுதவிர, அனைத்து நகர்ப்புறப்பகுதிகளிலும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்திடும் பொருட்டு, தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் மூலம் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிப் பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், மேற்கண்ட 3 நகராட்சிகளிலும் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் நல மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதுதவிர, மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், சுகாதார கட்டமைப்பில் வட்டார அளவில் தலா ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பதற்கென பிரான்மலை, முத்தனேந்தல் ஆகியப்பகுதிகளில் அதற்கான கட்டிடங்கள் அமைக்கப் படவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணை சுகாதார நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் மானாமதுரை, ஆவரங்காடு பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதுபோன்று பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவத்துறையின் எண்ணற்ற திட்டங்களும் மற்றும் அனைத்து சுகாதார கட்டமைப்புக்களும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவின்படி, நாட்டிலேயே முதல் முயற்சி யாக சுகாதார உள் கட்டமைப்பு தேவைகளை மேம்படுத்து வதற்கு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகளை பங்கேற்க செய்து அவர்களின் ஒத்துழைப்புடன் கிராமப்புறங்களி லிருந்து மக்களின் தேவை அறிந்து அவைகளை நிறைவு செய்வதற்கு மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் “சுகாதாரப் பேரவை” குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுகாதாரம் பேணப்பட வேண்டிய பள்ளி, ஊட்டச்சத்து மையங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் தேவைகளை கண்டறியும் முயற்சியாக வட்டார, மாவட்ட அளவில் சுகாதாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

மேலும், வட்டார அளவில் பெறப்படும் தீர்மானங்கள் மீது சுகாதாரம் தொடர்பான இணை துறைகளான குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுகாதார கட்டமைப்பினை மேம்படுத்தி மாவட்டத்தை சுகாதார முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
மேலும், 2023-2024-ஆம் நிதியாண்டில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்த வேண்டிய சுகாதார கட்டமைப்புகள் குறித்தும், என்னென்ன தேவைகள் என்பது குறித்தும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவம், சுகாதாரம் துறையைச் சார்ந்த அலுவலர்கள் விரிவாக எடுத்துரைப்பதன் அடிப்படையில், அதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து சுகாதார கட்டமைப்புக்களையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்)(பொ) மரு.தர்மர், துணை இயக்குநர்கள் மரு.விஜய்சந்திரன் (சுகாதாரப்பணிகள்), மரு.யோகவதி (குடும்ப நலம்), மரு.கவிதாராணி (தொழு நோய்), மரு.ராஜசேகரன் (காச நோய்) மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), க.சரவணமெய்யப்பன் (கண்ணங்குடி) மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top