Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்: மார்ச் 15 ல் அரிமளம் வட்டாரத்தில் 34 ஆவது முகாம்

புதுக்கோட்டை

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-2023ஆம் நிதியாண்டில் 39 மருத்துவ முகாம்கள் நடத்தட திட்டமிடப்பட்டு  இதுவரை 33 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை  திருமயம் தாலுகா, அரிமளம் வட்டாரத்தில் உள்ள கீழ்ப்பனையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 34 -ஆவது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநர் குழுவினர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொது மக்களை பல்வேறு நோய்க ளிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும். பல்வேறு விதமான நோய்களுக்கு வரும்முன் காப்போம் அணுகு முறையை மக்களிடையே ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இம்முகாம்களில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொது மக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்தா மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்” 15.03.2023 அன்று அரிமளம் வட்டாரத்தில், கீழ்ப்பனையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மருத்துவ முகாம் நடைபெறும். பொது மக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top