Close
ஏப்ரல் 5, 2025 11:32 காலை

இந்திய மருத்துவ சங்கத்தில் இருதயவியல் – சிறுநீரகவியல் கருத்தரங்கு

புதுக்கோட்டை

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயவியல் சிறுநீரகவியல் கருத்தரங்கு

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயவியல் மற்றும் சிறுநீரகவியல் தொடர்பான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை 26-03-23  நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பெரியசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை யின் செயல் அலுவலர் பிரேம்குமார் ராஜன்  ஆகியோர் முன்னிலை வகித்தார்.

புதுக்கோட்டை
கருத்தரங்கில் பேசிய மருத்துவர்கள் மனோஜ், சரவணகுமார்

இக்கருத்தரங்கில் இருதய சிறப்பு மருத்துவர் மனோஜ் பேசும்போது,  இதுவரை புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையானது கேத் லேப் எனப்படும் இருதய உள் ஊடுருவி மையம் மற்றும் பைபாஸ் சர்ஜரி செய்யும் முழு கட்டமைப்பை  உருவாக்கியுள்ளது.

இது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்த  மருத்துவமனை யில் மட்டும்  இவ்வசதி இருப்பதால் எண்ணற்ற உள்ளூர் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.  இருதய சம்பந்த மான பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து,  முத்து மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர் சரவணகுமார் பேசுகையில்,
நமது மாவட்டத்தில் சிறுநீரக நோய்க்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதைக்கருத்தில் கொண்டு  முத்து மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் சிறுநீரகவியல் நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.  மக்கள் தொடர்பு அதிகாரி பார்த்திபன் வரவேற்றார். திருமேனிநாதன் நன்றி கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top