Close
செப்டம்பர் 19, 2024 11:15 மணி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒத்திகை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒத்திகையை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை (Mock Drill) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்   தெரிவித்ததாவது: தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில்  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி (Mock Drill) நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14,12,207 கோவிட் முதல் தவணை தடுப்பூசிகளும், 13,78,358 கோவிட் இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1,86,461 முன்னெச்சரிக்கை நடவடிக் கை தடுப்பூசிகளும் என ஆகமொத்தம் 29,77,026 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 94 படுக்கைகள்.

தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என ஆகமொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

2023  நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோன சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வென்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வென்டிலேட்டர்களும், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகளும், 148 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்ஸிஜன் உருளைகளும், திரவ ஆக்ஸிஜன் 4 கொள் கலன்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான N95 முகக்கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, இணை இயக்குநர் (பொ) (மருத்துவப்பணிகள்) மரு.ராதிகா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் மரு.இந்திராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top