Close
நவம்பர் 22, 2024 12:34 மணி

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர் தங்குமிடம் திறப்பு

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர் ஆட்சியர் சாருஸ்ரீ

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் உள் நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நகராட்சி சார்பில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆண், பெண் இருபாலர்கள் தனிதனியே தங்கும் வசதி, பாதுகாப்பு பெட்டகம். உணவு அருந்தும் இடம், சுத்திகரிக்கபட்ட குடிநீர், கழிவறை வசதியுடன் 60 படுக்கை வசதி கொண்ட நவீன கட்டிடம் கட்டும் பணி பணிநிறைவு பெற்றது.

இதையடுத்து நாகை எம்..பி. எம். செல்வராஜ், எம்.எல்.ஏ-க்கள் பூண்டி கே.கலைவாணன்,  க.க. மாரிமுத்து, நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

மேலும் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவை எம்.பி. எம்.செல்வராஜ் திறந்து வைத்தார். ஆர்.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் இலவசமாக ரூ.3.5லட்சம் மதிப்பீட்டில் அடித்தளம், செட் அமைத்த இடத்தில் நாகை வானவில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளாண்டை எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் செல்வகுமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாதன், வட்டாட்சியர் காரல்மார்க்ஸ், ஒன்றிய குழு தலைவர் அ.பாஸ்கர், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், துணை தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் நகர்மன்ற உறுப்பினர் கள், தலைமை மருத்துவர் பா. பாபு, மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top