Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும் தர்ப்பூசணி பழம்

தமிழ்நாடு

நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி பழம்

கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுகும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது.

பழங்களின் இயற்கையாகவே நீர்சத்து அதிகம் உள்ள பழம் தர்ப்பூசணி பழம் தான். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தர்ப்பூசணி பழம் இருந்தற்கான ஆதாரமாக, அதன் விதைகள் லிபியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. நமது இந்தியாவைப் பொறுத்தவரையில், ஏழாம் நூற்றாண்டில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டதாகவும்  சான்றுகள் கூறுகின்றன.

தர்ப்பூசணியில் புதிய பழங்கள் (Fresh Fruits), சுத்திகரிக்கப் படாத பழங்கள் மற்றும் மேற்பரப்பு சுத்திகரிக்கப்பட்ட பழங்கள் ஆகிய இரண்டு வகைகளிலும் தர்ப்பூசணி பழத்தினை இணைத்து FSSAI வகைப்படுத்தியுள்ளது. மாம்பழத்திற்கு உள்ள செயற்கை முறை பழுக்க வைத்தலின் கட்டுப்பாடுகள், மேற்பரப்பு வேக்ஸ் பூச்சு மற்றும் புதிய பழங்களுக்குள்ள உணவுச் சேர்மங்களின் கட்டுப்பாடுகள் தர்ப்பூசணி பழத்திற்கும் பொருந்தும்.

தர்ப்பூசணி பழ ஜூஸில் சிட்ரிக் அமிலம் அதிகபட்சமாக 3.5% இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. தர்ப்பூசணியின் விதைகளிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கவும், அதற்கு தரங்கள் நிர்ணயித்தும் FSSAI அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தர்ப்பூசணி பழத்தின் உட்சதை சிவப்பு, பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்திலும் உண்டு.

நூறு கிராம் தர்ப்பூசணியில் 30 Kcal எரிசக்தியும், நீர்ச்சத்து 91.45 கி, மொத்த கொழுப்பு 0.15 கி, மொத்த கார்போஹைட்ரேட் 7.5 கி, அதில், நார்ச்சத்து 0.4 கி, புரதம் 0.61 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் தர்ப்பூசணியில் கால்சியம் 7 மிகி (தினசரி தேவையில் 1%), மெக்னீசியம் 10 மிகி (தினசரி தேவையில் 3%), மாங்கனீஸ் 0.04 மிகி (தினசரி தேவையில் 2%) மற்றும் பொட்டாசியம் 112 மிகி (தினசரி தேவையில் 2%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் தர்ப்பூசணியில் வைட்டமின் – ஏ 28 மிகி (தினசரி தேவையில் 4%), வைட்டமின் – சி 8.1 மிகி (தினசரி தேவையில் 10%), வைட்டமின்-பி6 0.045மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் வைட்டமின்-பி5 0.221 மிகி (தினசரி தேவையில் 4%) என்றளவில் உள்ளது. நமது உடலின் நீர்ச்சத்தினைப் பராமிரிக்க தர்ப்பூசணி உதவுகின்றது.

தர்ப்பூசணியில் உள்ள சிட்ருலின் உடற்பயிற்சி திறனை அதிகரிக்க உதவுகின்றது. தர்பூசணியில் உள்ள Lycopene (4532 மிகி/100 கி) பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பினைக் குறைக்கின்றது. தர்ப்பூசணியில் உள்ள Lycopene ரத்தத்தில் கொழுப்பைக் குறைத்தும், ரத்த அழுத்தத்தை குறைத்தும், இதயத்தின் செயல்பாட்டினை சீர்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பழங்களில் சிறப்பு வாய்ந்த தர்ப்பூசணி குறித்தும் அதில் உள்ள சத்துக்கள், மருத்துவக் குணங்கள் குறித்தும் புதுக்கோட்டை  டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர், மூத்த  மருத்துவர் கே.ஹெச் சலீம் கூறியதாவது:

தர்ப்பூசணியில் உள்ள Lycopene மற்றும் வைட்டமின்-சி-ன் மூலம் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி குணமும் இதற்கு உண்டு. தர்ப்பூசணியில் உள்ள Lycopene, வயது ஆவாதால் ஏற்படக் கூடிய தசை சீரிழிவினால் உருவாகும் பார்வையிழப்பைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து மற்றும் சிறிதளவு நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகின்றதுஎன்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top