Close
செப்டம்பர் 19, 2024 7:07 மணி

ஜூன் 24 ல் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

பன்னோக்கு மருத்துவ முகாம் தொடர்பாக ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்  (20.06.2023) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில்; நடத்திட  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வரும் 24.06.2023 அன்று புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ பிரிவுகளும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் கலந்துகொள்ள உள்ளன.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயூர்வேத சிகிச்சை மருத்துவர்களும் கலந்து கொள்வார்கள்.

இம்முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் ஈசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுடன், முழுஇரத்த பரிசோதனையும் நடைபெறவுள்ளது.

மேலும் இம்முகாமில் கலந்து கொண்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு உரிய தொடர் சிகிச்சைகளை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பதிவுபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படும் மருத்துவ மனைகள் மூலமாகவும் வழங்கிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

எனவே இம்முகாம்கள் மூலமாக பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் இம்முகாம் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

அதனடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம மக்களிடையே முகாம் நடைபெறும் இடம், நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி டவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் முகாமிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களை ஏற்பாடு செய்திடவும்,

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மருத்துவ முகாமில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க செய்திடவும், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குழந்தைகள் அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை அனைத்துத்துறை அலுவலர் களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, இம்மருத்துவ முகாம்கள் மூலமாக அதிகளவிலான பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.ராமு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top