Close
செப்டம்பர் 20, 2024 5:44 காலை

புதுக்கோட்டை அருகே மறமடக்கியில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதி மறமடக்கியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமி னை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  (24.06.2023) தொடக்கி வைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர்  அமைச்சர்  மெய்யநாதன் கூறியதாவது:

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மறமடக்கி மற்றும் வயலோகம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களுக்கு எத்தனை வயதிலும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இத்தகைய மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நோய் குறித்த அச்சங்கள் நீக்கப்படுகின்றன.

முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உயர் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 மக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. நூற்றாண்டு கால தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 80 ஆண்டு காலம் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏழையின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டனர். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மருத்துவத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற சிறப்பு வாய்ந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறையில் செயல்படுத் தப்பட்டுவரும் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்வாழ்வு வாழ்வதை உறுதிப்படுத் திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர்  சு.சொர்ணராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.நமச்சிவாயம், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.முகமது இந்தியாஸ், வட்டாட்சியர் (ச.பா.தி.) பரணி, ஊராட்சிமன்றத் தலைவர் ராஜமனோகரி ரவி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top