Close
நவம்பர் 22, 2024 10:48 காலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இம்மாதம் 28 -ல் சிறப்பு கால்நடை மருத்துவமுகாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கால்நடை சிறப்பு மருத்துவமுகாம்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பட்டுக்கோட்டை தாலுக்கா சங்சாய்நகர் கிராமத்தில் (TJR 163) சஞ்சய் நகர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் அருகில் சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் எதிர்வரும் 28.06.2023 அன்று காலை 8 மணிமுதல் 1  வரை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) பால்வளத்துறை, கால்நடைபராமரிப்பு த்துறை மற்றும் தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைகழகம் ஆகியன இணைந்து நடத்தும்  சிறப்பு  மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவர்களால் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினைப்பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் ஆகியன இலவசமாக மோற்கொள்ளப்படஉள்ளன.

தஞ்சாவூர்  மாவட்டஆட்சியர் சிறப்பு  மருத்துவ முகாமில் கலந்து  கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்தாய்க் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும், கலந்து கொண்டுபயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top