Close
செப்டம்பர் 20, 2024 3:40 காலை

டீம் மருத்துவமனை சார்பில் வயலோகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்..

புதுக்கோட்டை

வயலோகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாமானது, தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் ஊராட்சியிலுள்ள நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது.
முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

இம்மருத்துவ முகாமில், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன.

தொற்று நோய்களால் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், கொரோனா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அனுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார்.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி.யோகேஸ்வரி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top