Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

ஒலியமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே ஒலியமங்கலத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை தொடக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் கால்நடை மருத்துவ முகா மினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  (27.06.2023) தொடக்கி வைத்து, காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்நடை உணவு வகைகளை பார்வையிட்டு, சிறந்த பால் உற்பத்தி யாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கால்நடைக்கான தீவணப் பயிர்களை கால்நடை வளர்ப் போரிடம் வழங்கினார்.
பின்னர்  அமைச்சர் ரகுபதி கூறியதாவது: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் இன்றையதினம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் அனைவரும் தங்களது கால்நடைக ளுக்கு வழங்க வேண்டிய சத்தான உணவு வகைகள், தாது உப்பு கலவை உள்ளிட்டவைகளை இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உணவு வகைகளை அறிந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு வழங்க  வேண்டும்.
மேலும் குறைந்த செலவில் கோழி வளர்ப்பு திட்டத்திற்காக மறவாமதுரை, இடையாத்தூர், ஒலியமங்கலம் ஆகிய 3 இடத்திலிருந்து 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒலியமங்கலத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தடுப்பூசிகள்,  சத்தான உணவுகளை முறையாக வழங்க வேண்டும்.
இந்த முகாமில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல்,  நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூசிகள்,
வெறிநோய் தடுப்பூசிகள் தீவன வளர்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள், வகைப்படுத்தப்பட்ட பெண் கன்று உற்பத்திக் கான விந்தணு பிரித்தறிதல், புல்வளர்ப்பு, தாது உப்பு கலவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல்  பல்கலைகழக பேராசிரியர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர்கள்  பதில் அளிப்பார்கள்.
எனவே கால்நடை வளர்ப்போர் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமில் தங்களது கால்நடைகளுக்கு  சிகிச்சைகள் அளித்து பயன்பெற வேண்டும் என கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.
இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (கூ.பொ.) மரு.எஸ்.எஸ்.அரசு, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொது மேலாளர் (ஆவின்) எஸ்.தங்கமணி, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் பேராசிரியர் மற்றும் தலைவர்  பூ.புவராஜன், உதவி இயக்குநர் (கா.ப) மரு.ஆர்.பாபு, ஊராட்சிமன்றத் தலைவர்கள்  சி.சோலையம்மாள் சிவக்குமார் (ஒலியமங்கலம்), முருகேசன் (மேலத்தானியம்), ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சிவரஞ்சனி வினோத்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top