Close
நவம்பர் 24, 2024 3:16 காலை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 147 பேருக்கு பட்டம் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற முதலாவது பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அரங்கில்  மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற முதலாவது மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழாவில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ பட்டப் படிப்பு முடித்த 147 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

முத்தமிழறிஞர் கலைஞரால்  மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாவதாக மருத்துவப் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறும் அனைத்து மருத்துவர்களும் மனிதநேயமிக்க மருத்துவர்களாக மருத்துவ சேவையாற்ற வேண்டும்.

நடப்பாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 606 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பதற்கான இடங்கள் தேர்வு செய்துள்ளனர் எனவும் தங்களது வாழ்த்துரையில்  அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

முன்னதாக,  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் மேம்படுத் தப்பட்ட மயக்க மருந்துக்குப்பின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சை பிரிவுகளை,   அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,  மா.சுப்பிரமணியன்,  சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் (19.07.2023) திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய், நுரையீரல் பாதிப்பு, மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர்களது உடல் இயக்கத்தை கண்காணிப்பு மற்றும் சிகிச்சை செய்வதற்கு ஏதுவாக அறுவை சிகிச்சை அரங்கில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் 7 அதிநவீன படுக்கைகளுடன் கூடிய மயக்க மருந்துக்குப்பின் தீவிர சிகிச்சைப் பிரிவும், மேலும் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சை பெறுவது.

புதுக்கோட்டை
மருத்துவக்கல்லூரியில் திறந்து வைக்கப்பட்ட புதிய கருவி

உடனடி உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து காயங்களினால் ஏற்படும் மூளை, எலும்பு, தண்டுவடம் மற்றும் வயிற்றுப்பகுதியில் குடல் அறுவை சிகிச்சை செய்தவர்களை அனுமதித்து தீவிர சிகிச்சை பெறும் வகையில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் 10 அதிநவீன படுக்கைகளுடன் அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சை பிரிவும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவுகளில், படுக்கையானது மின்சாரம் மற்றும் மின்கலத்தினால் இயங்கும் வகையிலும், செயற்கை சுவாசம் அளிக்கக்கூடிய கருவி, உடலியக்கத்தை கண்காணிக்கும் கருவி மற்றும் உயிர் காக்கும் கருவிகளுடன் கூடிய மருந்துகள் அடங்கிய Crash Cart vd என அழைக்கப்படும் Trolly நிறுவப்பட்டுள்ளது. நோயாளிகள் தங்கள் உடலியக்கம் இயல்பு நிலைக்கு வரும் வரை இந்த பிரிவுகளில் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருக்கும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து,அன்னவாசல் மனநல காப்பகத்தில், சரிவர கவனிக்கப் படாமல் இருந்த நபர்களை,  அமைச்சர் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சந்தித்து, நலம் விசாரித்து, அவர்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் ஆடைகள் வழங்கினர். அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர்.

புதுக்கோட்டை
மனநலக்காப்பத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை விசாரித்த அமைச்சர்கள்

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை. முத்துராஜா , இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை தி.சி.செல்வ விநாயகம், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டி யன்,  மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பார்த்தசாரதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top