Close
நவம்பர் 22, 2024 12:09 மணி

எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணர்வு ரெட் மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை

ரெட் ரன் மாரத்தான்” போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி    கொடியசைத்து தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் விழாவினை முன்னிட்டு எச்.ஐ.வி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற ‘ரெட் ரன் மாரத்தான்” போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், இளைஞர் விழாவினை முன்னிட்டு, எச்.ஐ.வி.-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற ‘ரெட் ரன் மாரத்தான்” போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி   (30.08.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேசிய, மாநில, மாவட்ட அளவில் ‘இளைஞர் விழா 2023-24” மூலம் பள்ளி மாணாக்கர்களுக்கு விநாடி-வினா, கல்லூரி மாணக்கர்களுக்கு மாரத்தான், நாடகம், குறும்படம் தயாரித்தல் ஆகிய போட்டிகளை நடத்தி எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இப்பேரணியின் நோக்கம், எச்.ஐ.வி-எய்ட்ஸ்-ஆல் ஏற்படும் ஒதுக்குதல் மற்றும் புறக்கணித்தல் தொடர்பான காரணி களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுதல். இளைஞர்களிடையே பாதுகாப்பு மற்றும் பொறுப்பான பாலியல் உறவை ஊக்கப்படுத்துதல். எச்.ஐ.வி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்குறிய சேவைகளை ஊக்கப்படுத்துதல். எச்.ஐ.வி-எய்ட்ஸ் தொடர்பான அடிப்படை தகல்களை அறிந்து கொள்ளுதல் ஆகும்.

மேற்கண்ட நோக்கங்களை கருப்பொருளாக கொண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில்  கல்லூரி மாணவ,மாணவிகளிடையே மாரத்தான் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மாரத்தான் போட்டியானது பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக 5 கி.மீட்டர் சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

எனவே, நாம் அனைவரும் எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். எச்ஐ.வி உடன் வாழ்வோரை மதிக்கவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கவும், மருத்துவ வசதிகளை பெறவும் நாம் உறுதுணையாக விளங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தெரிவித்தார்.

இப்பேரணியில், அரசு மருத்தவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ராஜ்மோகன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் மாவட்ட திட்ட மேலாளர் (பொ) மரு.கே.இளையராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top