Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

ஈரோட்டில் லோட்டஸ் மகளிர் மருத்துவமனை திறப்பு

ஈரோடு

புதிய லோட்டஸ் மகளிர் மருத்துவ பிரிவை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோட்டில் திறக்கப்பட்ட  லோட்டஸ் மகளிர் மருத்துவமனை யில்  நவீன செயற்கை கருத்தரிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டின் நாப் அங்கீகாரம் பெற்ற முதல் பல்துறை மருத்துவமனையான லோட்டஸ்  மருத்துவமனையின்  சார்பு நிறுவனமான லோட்டஸ் மகளிர் மருத்துவமனை மற்றும் அதிநவீன அறைகளின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் லோட்டஸ் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சகாதேவன், துணைத் தலைவர் எஸ்.குமரன் வரவேற்றனர். புதிய லோட்டஸ் மகளிர் மருத்துவ பிரிவை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மகளிர் மகப்பேறு மற்றும் கரு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈ.எஸ்.உஷா, செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் ஸ்ருதி ராஜேந்திரன் உடன் இருந்தனர்.

மகளிர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் சகாதேவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,மகளிர் மருத்துவ மையத்தில் சிறப்பு பரிசோதனைகளாக 3டி ஸ்கேன் கருக்குழாய் பரிசோதனை ஹிஸ்டோ சல்பிங் கிராபி பரிசோதனைகள் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை கருத்தரிப்பு முறையான ஐவிஎஃப் மற்றும் இக்ஸி மற்றும் கருப்பைக்குள் விந்து செலுத்துதல் முறையும், இந்த முறையில் உதவுவதற்கு கருமுட்டை, விந்து, கரு ஆகியவற்றை உறைவு தன்மையில் நீண்டநாள்கள் பாதுகாத்தல் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கருமுட்டை மற்றும் விந்துதானம் வழியாக அரசின் வழிகாட்டு தலை பின்பற்றி கருவுற உதவி செய்யப்படுகிறது. விந்து பரிசோதனை மற்றும் விந்து குறைபாடுகளுக்கான சிகிச்சை களும் அளிக்கப்படுகிறது.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், கருவின் குறைபாடுகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. அடாப்ஸி மற்றும் பெத்தாலஜி பரிசோதனைகளும், குறைபாடு உள்ள குழந்தைகள், குடும்பத்தில் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அடிக்கடி கருசிதைவு ஏற்படும் நிலைமை உள்ளவர்களுக்கும் மரபணு பற்றிய ஆலோசனை மற்றும் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

ஈரோடு
ஈரோடு லோட்டர் மருத்துவமனை செயற்கை கருத்தரித்தல் பிரிவு திறப்பு விழாவில் பங்கேற்றோர்

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு வலியற்ற பிரசவம், சிக்கலான அனைத்து மருத்துவப் பிரச்னைகளுக்கும் சரியான தீர்வு காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை பிரசவங்கள், குறைமாத பிரசவங்கள், இளம்பெண் முதல் முதியவர் வரை அனைத்து வயது பெண்களுக்குமான சிகிச்சை முறைகள், மாதவிடாய் நின்ற பின்பு ஆலோசனை மற்றும் சிகிச்சைளும் வழங்கப்படுகின்றன.

லேப்ராஸ்கோப்பி ஹிஸ்டுரோஸ்க்பி சிகிச்சை முறைகள் மற்றும் பேப்ஸ் நியர் மூலம் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் வசதியும் உள்ளது.பிறந்த குழந்தைகளுக்கு விரிவான மூன்றாம் நிலை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, அனுபவம் வாய்ந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை நிபுணர் மூலம் அளிக்கப்படுகிறது.

லோட்டஸ்- தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் மருத்துவமனை (பிஎஃப்எச்ஐ) என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும் முதுகலை பட்டம் பெறுவதற்கான பயிற்சி மற்றும் கல்வி பெறுவதற்கான நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

லேப்ராஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி, கொலோனோஸ் கோப்பி மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஆகியவற்றிற்கான சிறந்த பயிற்சி மையமாகவும் மருத்துவர்கள் மத்தியில் புகழ்பெற்று லோட்டஸ் ஆஸ்பிட்டல்ஸ் விளங்கி வருகிறது என்றார் டாக்டர் சகாதேவன்.

விழாவில், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், பெருந்துறை ஒன்றிய செயலாளர் சாமி, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர், ரோட்டரி, அரிமா, ஜேசீஸ் சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top