Close
செப்டம்பர் 19, 2024 7:17 மணி

பெருந்துறை அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்

ஈரோடு

பெருந்துறை அருகே நடந்த சிறப்பு மருத்துவமுகாமை பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பெருந்துறை அருகே விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்குட்பட்ட கள்ளியம்புதூர் தூயவளவன் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி பாக்கியம், வட்டார மருத்துவர் .பேபி, விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மலர்விழி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி, விஜயமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை யில், பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி குத்துவிளக் கேற்றி தொடக்கி வைத்தார்.

இம்முகாமில், கண் பரிசோதனை -59, இ.சி.ஜி. -151, குழந்தைகள் நல பரிசோதனை 13, இரத்தப்பரிசோதனை – 381, HIV பரிசோதனை -20 பேர், 73 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது, கர்ப்பபை வாய் பரிசோதனை 19 பேருக்கு பார்த்து அதில் 4 – பேருக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் மருத்துவ அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஆனந்தி, கிருத்திகா, ஆதித்யா கண் நல மருத்துவர், சரவணக்குமார், காது மூக்கு தொண்டை நிபுணர், காந்திமதி குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் சிகிச்சைய ளித்தனர்.

இம்முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், ஐசிடிசி கவுன்சிலர், சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், மருந்தாளர்கள், காசநோய் மேற்ப்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சூர்யா குழந்தை நல அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top