Close
அக்டோபர் 5, 2024 6:43 மணி

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ தின உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

சிட்டி ரோட்டரி சார்பில் நடைபெற்ற உலக போலியோ தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ தினம் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் அரசு அலுவலர்கள் கட்டிடத்தில் நடைபெற்றது

நிகழ்வில், புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனத் தலைவரும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினருமான சேது கார்த்திகேயன் வரவேற்றார்.

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி மோகன் ராஜா  பங்கேற்று பேசியதாவது: 1960 -களில் அமெரிக்காவில் சின்சினாட்டி ரோட்டரி சங்கத்தின் கௌரவ உறுப்பினர் பிரபல மருத்துவர் நுண்கிருமிகள் ஆய்வாளர் ஆல்பர்ட் சபின், தனது ஆய்வின் மூலமாக உயிருள்ள போலியோ வைரஸினைக் கொண்டு உருவாக்கப்பட்ட எளிதாக குழந்தைகளுக்கு வாய் வழியாக வழங்கக்கூடிய சொட்டு மருந்து கண்டுபிடித்தார்.

பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரும்பொழுது நடைமுறை சிக்கல்கள் உண்டாயின. அப்பொழுது மருத்துவர் ஜோனஸ் சால்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட 1955 -ல் அரசு உரிமம் பெற்ற ஊசி மூலம் உடலுக்குள் செல்லும் தடுப்பு மருந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.

ஜோன்ஸ் பால்க் கண்டறிந்த தடுப்பு மருந்து செயலிழக்கப் பட்ட போலியோ வைரஸ் மூலம் உருவாக்கப்பட்டது. ஆல்பர்ட் சவின் என்பவர் 1960 -ல் உலக சுகாதார நிறுவனத்தை அணுகி தன்னுடைய சொட்டு மருந்து போலியோ அற்ற உலகை உருவாக்க வழிவகுக்கும் என்று விளக்கிக் கூறிய பொழுது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

ஆனால் போலியோ ஒழிப்பு பயணத்தை 1979 -ல் ரோட்டரி பிலிப்பைன்ஸில் துவங்கிய பொழுதும் பின் 1985 -ல் உலக அளவில் கொண்டு செல்லும் போதும் உலக சுகாதார நிறுவனத்தை இணைத்துக் கொண்டது.

1978 ல் நடந்த  ரோட்டரி உச்சி மாநாட்டில் 1980 -ல் நடைபெறும் ரோட்டரியின் பவள விழாவினை யொட்டி உலக அளவில்  மாபெரும்  மக்கள் நலத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து சுகாதாரம், பசியின்மை, மனிதநேயம் என்கிற திட்டத்திற்கு நிதி திரட்டினர்.

என்ன திட்டத்தை செயல்படுத்தலாம் என்று உலக அளவில் ரோட்டரி மாவட்டங்களிடம் ஆலோசனை கேட்டனர். பரிந்துரைகள் அனுப்புங்கள் என்று வேண்டினர். அப்போது வந்திருந்த 35 திட்ட வரைவுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டில் முற்றிலுமாக போலியோ ஒழிக்க வேண்டும் என்கிற திட்டம் ரோட்டரி தலைவர்களை கவர்ந்தது.

அதையே முதல் திட்டமாக கொள்ள வேண்டும் என்று ரோட்டரி தீர்மானித்தது. உலக சுகாதார நிறுவனமும் இதனை ஏற்றுக் கொண்டது. காரணம் மேற்கு பசிபிக் பகுதியில் இருந்த 32 நாடுகளில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் 45 சதவிகிதம் பேர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே இருந்தனர்.

இங்கு போலியோவால் இறப்பு 74 சதவீதம் ஆகும். ஆகவே இந்த திட்டம் தொடங்குவதற்கான நோக்கமும், அவசியமும், கால சூழ்நிலையும் இருந்தது. இதற்காக  7,60,000  அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது.

உலகம் முழுக்க இருந்து ரோட்டரி உறுப்பினர்கள் தங்கள் பணத்தை கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வெற்றியும் கண்டனர். அதையே நாம்  போலியோ ஒழிக்கப்பட்ட நாளாக உலகம் முழுவதும் ரோட்டரி அமைப்பால் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் சங்கர், நேரு யுவகேந்திரா அலுவலர் நமச்சிவாயம், மருத்துவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top