புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், பொதுமக்கள் நோயில்லா நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இம்மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் மற்றும் இருப்பு கோப்புகள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் பராமரிக் கப்படுவது குறித்தும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் வருகைகள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள்,
நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனையினை சுகாதாரமான முறையில் பராமரித் திடவும், போதுமான அளவில் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது.
மேலும் மருத்துவமனைக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நாள்தோறும் மருத்துவமனைகளில் நடைபெறும் மகப்பேறு எண்ணிக்கை கள் குறித்தும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துக ளிலிருந்து மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்து வது குறித்தும் மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்காக தேவையான இடவசதிகளை மேம்படுத்தவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனவே தமிழக அரசால் மருத்துவத்துறையில் மேற்கொள் ளப்படும் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, அரசு தலைமை மருத்துவர்கள் சரண்யா (மணமேல்குடி), முகமதுஅலி ஜின்னா (ஆவுடையார்கோவில்), வட்டாட்சியர்கள் முகமது சேக் அப்துல்லா, மார்டின் லூதர்கிங் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.