கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு திமுக மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அன்னவாசலில் உள்ள தனியார் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினார்கள். இம்முகாமினை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மாநில மருத்துவ அணி அமைப்பாளர் அண்ணாமலை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் முத்துக்கருப்பன், மற்றும் துணை அமைப்பாளர் அர்வின்ராஜா ஆகியோர் முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு இருதய ஸ்கேன், எக்கோ, ஈசிஜி எடுத்துக் கொண்டனர்.
முகாமில் 15 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிகள் ஈடுபட்டு கண் மற்றும் பல் இருதயம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர்
பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் ஊட்டச்சத்து டானிக் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.