Close
நவம்பர் 21, 2024 10:53 மணி

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா

புதுக்கோட்டை

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் (03.12.2023) தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக, சிறப்பு மருத்துவ முகாம்கள், மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு மற்றும் மறுவாழ்வு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக செயல்படும் அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படும் இல்லங்கள், சிறப்பு பள்ளிகளுக்கு பரிசுகளையும் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், நவீன காதொலிக் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், நடைபயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் ரூ.7.85 இலட்சம் மதிப்பீட்டில் 84 பயனாளி களுக்கும்  சட்டத்துறை அமைச்சர்  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  ஆகியோர் வழங்கினர்.

புதுக்கோட்டை
நலத்திட்ட உதவி பெற்ற மாற்றுத்திறனாளிகள்

இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அறிந்து கொண்டு உரிய முறையில் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்.

இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்  த. ஜெயலட்சுமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன்,  நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் தங்கம், வட்டாட்சியர் கவியரசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top