Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

திருமயம் ஊராட்சியில் நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை

திருமயத்தில் நடைபெற்ற மக்களைத்தேடி மருத்துவத்திட்ட காச நோய் பரிசோதனை முகாம்

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் நடமாடும் வாகனம் மூலம் திருமயம் ஊராட்சியில் காசநோய் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட துணை இயக்குநர் சங்கரி உத்தரவின் பேரில், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் மற்றும் ஜெயம் பவுண்டேசன் தொண்டு நிறுவனமும் இணைந்து மாவட்டத் திலுள்ள 13 ஒன்றியங்களிலும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் சார்பில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் ஒரு ஒன்றியத்துக்கு 2 முகாம்கள் நடத்தப் படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் பாப்பாவயல், காளியம்மன் கோயில் திடலில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற காச நோய் கண்டறியும் முகாமை, ஊராட்சித்தலைவர் எம். சிக்கந்தர் தொடக்கி வைத்தார்.

இதில், ஹெச்ஐவி, சளி, காசநோய், நுரையீரல் எக்ஸ்-ரே உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன, இம்முகாமில் அப்பகுதியைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட மொத்தம் 50 பேர் கலந்து கொண்டனர். இதில், 22 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேரது சளி மேல் பரிசோதனைக்கு உள்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. மேலும்,எக்ஸ்-ரே மூலம் 6 பேருக்கு காசநோய் அறிகுறியும் கண்டறியப்பட்டது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் கூறியதாவது: திருமயம் ஒன்றியத்தில் ஏற்கெனவே புலிவலம் ஊராட்சியில் நடைபெற்ற காசநோய் பரிசோதனை முகாமில் பங்கேற்ற 90 பேரில் 78 பேருக்கு சளி பரிசோதனையும், 12 பேருக்கு நுரையீ ரல் பரிசோதனையும் செய்யப்பட்டதில், 7 பேருக்கு காசநோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

முகாம் ஏற்பாடுகளை, தொண்டு நிறுவன மேற்பார்வையாளர் ஆர்.எஸ். ரேவதி, தொடர்பு பணியாளர்கள் எம். பஞ்சவர்ணம், பி. ரெத்தினம்மாள், வி. மாரிமுத்து, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட ஒன்றிய கண்காணிப்பாளர் இந்துமதி, உதவியாளர்கள் முத்துக்கிருஷ்ணன், ஹரிஹரசுதன் ஆகியோர் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top