MBBS – க்கு மாற்று BDS அல்ல. அப்படி எண்ணி இனிமேலும் யாரும் உங்கள் எதிர்காலத்தைப் பாழாகிக் கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள். குறைந்தது இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தப்படிப்பை யாரும் படிக்காதீர்கள். இந்தப் படிப்பு இன்று பொருளீட்ட முடியாத கல்விகளில் ஒன்றாகிப் போய்விட்டது. இப்போது இருக்கின்ற 130 கோடி மக்கள் தொகை 150 கோடியாக உயர்ந்தாலும் இப்போது வரைக்கும் படித்து முடித்துள்ள வேலையற்ற பல் மருந்துவர்களே போதுமானவர்கள்.
மதிப்பிற்குரிய மாணவர்களே..இன்றைய சூழலில் வேண்டாம் BDS படிப்பு. என்று நூலை முடித்திருக்கிறார், புதுக்கோட்டையின் பிரபல, மூத்த பல் மருத்துவர் நா. ஜெயராமன்.
“பல் மருத்துவமா படிக்கப்போகின்றீர்கள்?” – நூலை இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். முதல் பகுதி, மருத்துவர் ஜெயராமன் பல் மருத்துவப் படிப்பு படிக்கப் போனது, படிக்கின்ற காலத்தில் அவருக்கேற்பட்ட நல்ல மற்றும் விரும்பத்தகாத அனுபவங்கள், சந்தித்த ஆகச் சிறந்த மருத்துவர்கள், மருத்துவத்தி
MBBS – க்கு மாற்று BDS அல்ல. அப்படி எண்ணி இனிமேலும் யாரும் உங்கள் எதிர்காலத்தைப் பாழாகிக் கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள். குறைந்தது இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தப்படிப்பை யாரும் படிக்காதீர்கள். இந்தப் படிப்பு இன்று பொருளீட்ட முடியாத கல்விகளில் ஒன்றாகிப் போய்விட்டது. இப்போது இருக்கின்ற 130 கோடி மக்கள் தொகை 150 கோடியாக உயர்ந்தாலும் இப்போது வரைக்கும் படித்து முடித்துள்ள வேலையற்ற பல் மருந்துவர்களே போதுமானவர்கள்.
மதிப்பிற்குரிய மாணவர்களே…இன்றைய சூழலில் வேண்டாம் BDS படிப்பு. என்று நூலை முடித்திருக்கிறார், புதுக்கோட்டையின் பிரபல, மூத்த பல் மருத்துவர் நா. ஜெயராமன்.
“பல் மருத்துவமா படிக்கப்போகின்றீர்கள்?” – நூலை இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். முதல் பகுதி, மருத்துவர் ஜெயராமன் பல் மருத்துவப் படிப்பு படிக்கப் போனது, படிக்கின்ற காலத்தில் அவருக்கேற்பட்ட நல்ல மற்றும் விரும்பத்தகாத அனுபவங்கள், சந்தித்த ஆகச் சிறந்த மருத்துவர்கள், மருத்துவத்தில் சிறந்து குணத்தால் தவிர்க்கப்பட வேண்டிய மருத்துவர்கள் மற்றும் அவர் மருத்துவராகவும் சமூகப் போராளியாகவும் மாறிய கதை.
இரண்டாவது, பல் மருத்துவப்படிப்பு மற்றும் தொழிலில் உள்ள பிரச்சினைகள். MBBS படிப்புக்கு இணையான படிப்பு BDS இல்லை என்று சொல்வதோடு அதில் உள்ள பிரச்னைகளையும் சிக்கல்களையும் அனுபவபூர்வமாகவும், ஆதாரங்களோடும் எழுதியிருப்பதோடு எச்சரிக்கவும் செய்கிறார் ஜெயராமன். இது ஒரு மூத்த, அனுபவமிக்க , சமூக அக்கறை கொண்ட ஒரு மருத்துவரின் நூல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டாக்டர் கனவில் இருக்கும் பெற்றோர்களும், மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.வெளியீடு- பாரதி புத்தகாலயம், சென்னை. 8778073949.விலை-ரூ.90 /-
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #