Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

கொய்யா பழம்னா சாதாரணமா..? அதிக பலன் தரும் அற்புத பழம்..!

கொய்யாப்பழம்

Health Benefits of Guava in Tamil

கொய்யா மற்றும் அதன் இலைகளில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் இதயம், செரிமானம் மற்றும் பிற உடல் அமைப்புகளுக்கு உதவுகின்றன.

நம் நாட்டில் தாராளமாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாகவும் விலை மலிவான பழமாகவும் இருப்பது கொய்யாப்பழம் மட்டுமே. கொய்யா பழத்தை குறைவாக மதிப்பிடக் கூடாது. விலை உயர்ந்த பல பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை விட இந்த சிறிய கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. நம் மண்ணில் விளையக்கூடிய இதைப்போன்ற பயனுள்ள பழங்களை சாப்பிட முயற்சி செய்வோம்.

Health Benefits of Guava in Tamil
கொய்யா பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தது. அந்த பதிவில் குறிப்பிட்டிருந்த தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம் வாங்க.

ஊட்டச்சத்து விபரம்

100 கிராம் கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்
8.59 கிராம் நார்ச்சத்து
0.32 கிராம் கொழுப்பு
45 கலோரிகள்
1.4 கிராம் புரதம்
5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்

Health Benefits of Guava in Tamil
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

கொய்யா பழத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழம்

கொய்யா பழங்களை சரியான அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இது ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா பழத்தை தங்கள் அன்றாட உணவு வழக்கத்தில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொய்யா பழத்தில் உள்ள பண்புகள் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கின்றன. இது விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணியான செல் சேதத்தை தடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கொய்யா பழத்தில் உள்ளன.
Health Benefits of Guava in Tamil
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்

  1. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது;
  2. கொய்யா பழத்தில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது.
  3. இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
  4. கொய்யா பழம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  5. இது சுவாசக் குழாயில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
  6. கொய்யா பழம் எடை இழப்புக்கும் உதவும்.
  7. கொய்யா பழம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Health Benefits of Guava in Tamil

ஆச்சர்ய தகவல்

ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில் ஆச்சர்யமான உண்மை வெளியாகியது. ஆராய்ச்சியாளர்கள் இந்தியர்கள் உட்கொள்ளும் பொதுவான 14 வகையான பழங்களைத் தேர்ந்தெடுத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் தேர்ந்தெடுத்த பழங்களின் பட்டியலில் மாதுளை, சீதாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், இந்தியன் பிளம், அன்னாசி, பப்பாளி, திராட்சை, தர்பூசணி, கொய்யா போன்றவை அடங்கும். முடிவுகளில் கொய்யாவில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பது தெரியவந்தது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், செல்லுலார் சேதம், முதுமை, புற்றுநோய் மற்றும் பல சிதைவு நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொய்யா அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்துடன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது.இந்த ஆய்வில் அன்னாசி தரவரிசையில் கடைசியாக இருந்தது.
Health Benefits of Guava in Tamil
கொய்யாவில் 100 கிராமுக்கு 496 மில்லிகிராம் மற்றும் அன்னாசிப்பழத்தில் 100 கிராமுக்கு 22 மில்லிகிராம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது தெரியவந்தது.

மலிவான பழம் என்றால் மட்டமாகிவிடுமா..?

விலையுயர்ந்த பழங்கள் மிகவும் ஆரோக்கியமான பழங்கள் என்ற வழக்கமான நம்பிக்கைக்கு எதிராக இந்த கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. கொய்யா மிகவும் மலிவான பழமாகும். இதை நாம் எப்போதும் சந்தையில் வாங்கமுடியும். எல்லா தரப்பு மக்களும் வாங்குவதற்கு எளிதான பழம்.

மேலும் கொய்யா அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், இது குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு. கொய்யாவில் உள்ள பீனாலிக் உள்ளடக்கம் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top