Close
நவம்பர் 22, 2024 7:32 காலை

முருங்கை கீரை சாப்பிடுங்க : முத்தாக வாழுங்க..!

முருங்கை

Health Benefits of Murungai Keerai in Tamil

அன்று கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஒரு முருங்கை மரம் இல்லாமல் இருக்காது. ஆனால் இன்று வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது என்பது மாறிப்போய்விட்டது. இன்று கடைகளில் முருங்கைக்கீரை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை போன்ற அனைத்து பகுதிகளும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

பூச்சிக்குத் தெரிகிறது

நன்றாக கவனியுங்கள் முருங்கை மரத்தில்தான் அதிகமாக பூச்சி தாக்குதல் இருக்கும். காரணம் அதில் உள்ள சத்து. ஆக, பூச்சிகளுக்குக்கூட முருங்கையில் உள்ள சத்துகள் தெரிகிறது.

கீரையின் அரசன் என்றால் அது முருங்கைதான். முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது அவ்வளவு சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் முருங்கையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க் மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபைபர், புரதம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Health Benefits of Murungai Keerai in Tamil
முருங்கைக்கீரை மகிமையை உணர்ந்து தான் ‘ஒரு எருதும் ஒரு முருங்கை மரமும் இருந்து விட்டால் போதும் எந்த வித வறட்சியையும் சமாளித்துவிடலாம்’ என்று கிராமங்களில் கூறியிருக்கிறார்கள்.

இந்த கருத்தைத்தான் இயற்கை விவசாயமும் வலியுறுத்துகிறது. பொதுவாக கீரைகளை வாரத்திற்கு மூன்று நாட்களாவது சமைத்து உண்டு வந்தால் புரதக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சி பாதிப்பு போன்ற பிரச்சனைகளை இல்லாமல் செய்துவிடும்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு உடல் பிரச்னைகளை நீக்கும் முக்கிய பணிகளையும் முருங்கை எனும் அற்புத கீரை செய்கிறது . இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

முருங்கையை பொறுத்தவரை இதை வித விதமாக சமைக்கலாம். சில கீரைகளில் கடைசல் பொரியல் மட்டும் தான் செய்யமுடியும். ஆனால் முருங்கைக் கீரையில் மசியல், பிரட்டல், குழம்பு, சூப் என்று பல வெரைட்டி டிஷ் செய்து அசத்திவிடலாம்.
Health Benefits of Murungai Keerai in Tamil

உடல் வெப்பம் தணியும் :

அகஸ்தியரின் குணபாடத்தில் முருங்கை கீரை மந்தத்தன்மையை போக்கி, உடல் சூட்டை குறைத்து, கண் நோயை தீர்த்து வைக்கும் குணங்களை கொண்டது என்று கூறப்படுகிறது . முருங்கை கீரை வெப்பத்தை உண்டாக்கும் தன்மை பெற்றிருப்பதால் சூட்டு உடம்புக்காரர்கள் மிளகு சேர்த்து பயன்படுத்தலாம். மிளகு சேர்ப்பதால் அவை உணவில் உள்ள சூடு மற்றும் குளிர்ச்சியை சமப்படுத்தி கொடுக்கும்.

கண் பார்வைக்கு சிறந்தது :

பொதுவாக, கண் பார்வை கூர்மை பெற கேரட் சாப்பிட வேண்டும். கால்சியம் சத்திற்கு பால் அருந்த வேண்டும். விட்டமின் சி சத்திற்கு ஆரஞ்சு, பொட்டாசியம் சத்திற்கு வாழைப்பழம் என்று சொல்வார்கள்.

ஆனால் இவற்றிலுள்ள சத்துகளின் அளவைவிட அதிகமாகவும் ஒட்டுமொத்தமாகவும் முருங்கை கீரையிலேயே உள்ளது. முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகள் எளிதில் குணமாகும்
Health Benefits of Murungai Keerai in Tamil
முருங்கை சூப்:

பகல் நேரத்தில் வீட்டில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக் கீரையை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை சூப்பாக குடிக்கலாம். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பித்தம், கண் கட்டி எல்லாம் குணமாகும்.

மருத்துவ குணங்கள்:

மூட்டுவலி, வாயுக் கோளாறு, கண் தொடர்பான நோய்களுக்கு மாத்திரை மருந்துகளே தேவையில்லை. மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அவித்து தொடர்ந்து உண்டு வந்தால் வயதானவர்கள் கூட குணம் அடைவார்கள்.அதேபோல் வாயுக் கோளாறு இருப்பவர்கள் முருங்கைக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாயு பிரச்னை தீரும்.
Health Benefits of Murungai Keerai in Tamil

மருத்துவ ஆராய்ச்சி:

இன்றும் முருங்கைக் கீரை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. முருங்கை கீரையில் 46 ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் இருக்கின்றன என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டி ஆக்ஸிடெண்ட்டின் பணி, உடலில் உள்ள செல் சேதத்தைக் குறைத்து இளமையோடு இருக்க உதவும்.

முருங்கைக் கீரை மட்டுமல்ல, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. அதன் காய், இலை, பட்டை, வேர் என்று எல்லாம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top