Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

என்னது..? முள்ளங்கிக் கீரையில் இவ்ளோ நன்மைகளா..?

கிழங்குடன் உள்ள முள்ளங்கிக்கீரை

Health Benefits of Raddish Lleaves in Tamil

முள்ளங்கி நல்ல சத்துளளது என்று எல்லோரும் அறிவோம். ஆனால் அதன் கீரையை தூக்கி வீசிவிடுவோம். அனால் அதன் நன்மைகள் அறிந்தால் அசந்துபோவோம்.

முள்ளங்கிக் கீரையை பெரும்பாலும் எல்லோரும் தூக்கி வீசிவிடுகிறார்கள். ஆனால் அதன் மகத்துவம் தெரிந்தவர்கள் அதை தூக்கி வீசமாட்டார்கள்.

128 கிராம் சமைத்த, முள்ளங்கி கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள் ( நம்பகமான ஆதாரம்):

கலோரிகள்: 70.4
கார்போஹைட்ரேட்டுகள்: 8.3 கிராம்
புரதம்: 4.5 கிராம்
கொழுப்பு: 3.5 கிராம்
ஃபைபர்: 2.3 கிராம்
பொட்டாசியம்: 16% தினசரி மதிப்பு
மெக்னீசியம்: 28% தினசரி மதிப்பு
இரும்பு: 7% தினசரி மதிப்பு
வைட்டமின் சி: 77% தினசரி மதிப்பு
வைட்டமின் கே: 171% தினசரி மதிப்பு

முள்ளங்கிக் கீரையில் புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன. முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் சிறிய துண்டுகளாக வெட்டி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம்.
Health Benefits of Raddish Lleaves in Tamil

சிறுநீரக நோய்கள்

முள்ளங்கியில் உள்ள அத்தனை நன்மைகளும் அதன் கீரையிலும் உள்ளது. முள்ளங்கிக் கீரை இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளை குணப்படுத்துகின்றன.

நீரிழிவு பாதிப்புக்கு

நீரிழிவு பாதிப்புக்கு முள்ளங்கிக்கீரை சிறந்த மருந்தாக உள்ளது. மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உள்ளது. முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.உடலின் வைட்டமின் பற்றாக்குறைகளை நீக்கும்.
Health Benefits of Raddish Lleaves in Tamil
சிறுநீரக கற்கள் கரையும்

முள்ள‌ங்கிக் கீரையின் சாற்றை ஐந்து டீஸ்பூன் அளவு எடுத்து, மூன்று வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும். ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.

தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
Health Benefits of Raddish Lleaves in Tamil
ஆக்ஸிஜனேற்ற மூலம்

முள்ளங்கிக்கீரையில் அதிக அளவு புரதங்கள், கால்சியம், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் பீனால் உள்ளடக்கங்கள் உள்ளன.பச்சை கீரையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளன. அவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. மேலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

எலும்பு வலுபெறும்

முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் K உள்ளதால் இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. மேலும் எலும்பு கனிமமயமாக்கலை ஊக்குவிக்கிறது.

எடை மேலாண்மை

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து, முள்ளங்கிக் கீரையில் உணவுக்கு திருப்திகரமான மற்றும் சத்தான கூடுதல் உணவாகும். அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் போது நிறைவான உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவும்.
Health Benefits of Raddish Lleaves in Tamil
நச்சு நீக்கும் பண்புகள்

முள்ளங்கிக் கீரை நச்சு நீக்கும் பண்புக்கு பெயர் பெற்றது.அது நச்சுகளை அகற்றுவதற்கு உடலுக்கு உதவக்கூடிய கலவைகளைக் கொண்டிருக்கின்றன. கல்லீரலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரிப்பதன் மூலமாக கழிவுகளை வெளியேற்றுகிறது.

முள்ளங்கிக் கீரை சாலட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

முள்ளங்கிக்கீரை சிறிதளவு

பச்சை மிளகாய் 2

சின்ன வெங்காயம் 5

தக்காளி 2

எலுமிச்சை பாதி

செய்முறை

முள்ளங்கிக் கீரையை எடுத்துக்கொள்ளுங்கள். (நன்கு கழுவிய கீரை) அதை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதை ஒரு அகல பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கீரையில் போடுங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்கி கீரையில் போட்டு கீரையை கசக்காமல் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி எல்லாம் உறவு சேரும் வகையில் கையால் கலக்குங்கள்.

பின்னர் அப்படியே மூடி ஒருமணிநேரம் விட்டுவிடுங்கள். ஒருமணி நேரம் கழித்து அதை திறந்து எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிட்டு கரண்டியால் கிளறிவிடுங்கள்.

இதோ சூப்பரான முள்ளங்கிக்கீரை சாலட் ரெடியாச்சு. சூடாக சோறுபோட்டு ஒரு கட்டு காட்டுங்கள். அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்.

பக்கத்து வீட்டு பாமா அக்கா கேட்டா அவங்களுக்கும் சொல்லிக்குடுங்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top