Close
செப்டம்பர் 23, 2024 4:23 மணி

என்னது..? பேக்கேஜிங் உணவுகளால் இவ்ளோ ஆபத்தா..? அதிர்ச்சி அறிக்கை..!

பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் (கோப்பு படம்)

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்களில் இருந்து சுமார் 3,600 க்கும் மேற்பட்ட இரசாயன துகள்கள் மனித உடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகி உள்ளது.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்றும் தெரியவந்துள்ளது. அதனால் அதன் மீது நாம் அதீத கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சூரிச்சை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபுட் பேக்கேஜிங் ஃபோரம் அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வு ஆசிரியர் பிர்கிட் கியூக் கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் உணவுடன் தொடர்புடைய 14,000 இரசாயனங்களை பட்டியலிட்டனர். அவை பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் அல்லது பிற பொருட்களால் என பேக்கேஜிங்கிலிருந்து உணவில் சேரக்கூடிய திறன் கொண்டவை.

முக்கிய அம்சங்கள்:

  1. உணவுப் பொட்டலங்களில் இருந்து 3,600 க்கும் மேற்பட்ட இரசாயனத் துகள்கள் மனித உடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
  2. இவற்றில் சுமார் 100 இரசாயனங்கள் மனிதர்களுக்கு அதீத பிரச்சனை தரக்கூடியவை என்று கருதப்படுகிறது
  3. கன்வேயர் பெல்ட்கள் போன்ற உணவு தயாரிக்கும் செயல்முறையின் பிற பகுதிகளிலிருந்து சில இரசாயனங்கள் வரலாம்

செப்டம்பர் 17ம் தேதி அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உணவு பேக்கேஜிங் அல்லது தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 3,600 க்கும் மேற்பட்ட இரசாயனத் துகள்கள் மனித உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. மற்றவை பற்றி அதிகம் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 100 இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றன என்று சூரிச்சை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபுட் பேக்கேஜிங் ஃபோரம் அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வு ஆசிரியர் பிர்கிட் கியூக் கூறியுள்ளார்.

இந்த இரசாயனங்கள் சில அளவீடுகளில் ஒப்பிட்டு நன்கு ஆய்வு செய்யப்பட்டவை. மேலும் ஏற்கனவே மனித உடல்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது பிஎஃப்ஏக்கள் (PFAS) மற்றும் பிஸ்ஃபினால் ஏ – இவை இரண்டும் தடை செய்யப்பட வேண்டியவையாகும்.

இதுகுறித்து ஏஎஃப்பி-யிடம் கியூக் கூறும்போது, ‘மற்றயவைகள் ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் எப்படி உணவுடன் கலக்கின்றன என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் அவர் கூறினார்.

கன்வேயர் பெல்ட்கள் அல்லது சமையலறை பாத்திரங்கள் போன்ற உணவு தயாரிக்கும் செயல்முறையின் மூலமாகவும் பிற பகுதிகளிலிருந்தும் அவை வரலாம்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த இரசாயனங்களை தற்போதுள்ள பயோமோனிட்டரிங் டேட்டாபேசிலும் தேடினர். இது மனித மாதிரிகளில் உள்ள இரசாயனங்களைக் கண்காணிக்கிறது.

இந்த குழு சில நூற்றுக்கும் மேற்பட்ட FCC-களைக் கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் 3,601-ஐக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அனைத்து அறியப்பட்ட FCC களில் இது கால் பகுதி என்று கியூக் கூறினார்.

எனினும் மற்ற பிறவற்றில் இருந்தும் இந்த இராசயனதன் துகள்கள் வர வாய்ப்புள்ளது என்பதால், இந்த இரசாயனங்கள் அனைத்தும் உணவுப் பேக்கேஜிங்கில் இருந்து தான் உடலில் கலந்தது என்பதை இந்த ஆய்வில் முழுமையாக காட்ட முடியவில்லை.

அதிகமாக கவனிக்க வேண்டிய இரசாயனங்களில் ஏராளமான பிஎஃப்ஏஎஸ் உள்ளன. அவற்றை ஃபாரவர் கெமிக்கல்ஸ் என்றும் அழைக்கிறார்கள். அவை சமீபத்தில் மனித உடலின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டு பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகி இருக்கின்றன.

ஏற்கனவே பல நாடுகளில் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பாட்டில்களில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ என்ற ஹார்மோன்களை சீர்குலைக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டது.

ஹார்மோனை சீர்குலைக்கும் மற்றொரு இரசாயனம் பித்தலேட்ஸ் ஆகும். இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தன்மையுடையது.

பிளாஸ்டிக் உற்பத்தியின் துணை தயாரிப்புகளான ஒலிகோமர்களைப் பற்றி குறைவாகவே அறியப்படுகிறது. “இந்த இரசாயனங்கள் ஏற்படுத்தும் ஆரோக்கிய விளைவுகள் குறித்து அறிவதற்கு கிட்டத்தட்ட எந்த ஆதாரமும் இல்லை” என்று கியூக் கூறினார்.

பேக்கேஜிங் உணவுகளைக் குறைக்கவும்:

ஆய்வில் இருக்கும் ஒரு வரம்பு என்னவெனில், குறிப்பாக எந்த இரசாயனங்களில் அதிக செறிவு இருக்கிறது என்பதை சொல்ல முடியாது என்பதை கியூக் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த இரசாயனங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள முடியும் என்று எச்சரித்ததுடன், 30 வெவ்வேறு பிஎஃப்ஏக்கள் (PFAS) உள்ள ஒரு மாதிரியையும் சுட்டிக்காட்டினார்.

பேக்கேஜிங்கில் வரும் உணவுப்பொருட்கள் மற்றும் பல உணவு சார்ந்த உபயோகப்பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று கியூக் பரிந்துரைத்தார். மேலும் பேக்கேஜிங்கில் வரும் உணவை சூடாக்குவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆதார அடிப்படையிலான மருத்துவ நிபுணரும், ஆராய்ச்சியில் ஈடுபடாதவருமான டுயூனே மெல்லார், “இது ஒரு சிறப்பான முழுமையான ஆய்வு ” என்று பாராட்டியுள்ளார்.

“இருப்பினும், இந்த இரசாயனங்கள் எவ்வளவு வெளிப்படும் என்பதை இது உள்ளடக்காது மற்றும் தற்போதைய சூழலில் இந்த இரசாயனங்களின் பிற ஆதாரங்களையும் இது குறிக்கிறது,” என்று அவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.

“தேவையற்ற எச்சரிக்கைக்கு” பதிலாக, மக்கள் “சிறந்த தரவைக் கோருகின்றனர் மற்றும் இறுதியில் நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய இரசாயனங்கள் பற்றிய தேவையற்ற வெளிப்பாட்டைக் குறைக்க வேண்டும்” என்றும் மெல்லர் பரிந்துரைத்தார். இதில் சில இரசாயனங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை.

ஐரோப்பிய ஒன்றியம் உணவுப் பேக்கிங்கில் பிஎஃப்ஏ-க்கள் (PFAS) பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியிலிருந்து பிஸ்பெனால் ஏ க்கு இதேபோன்ற தடையை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top