மூக்கிரட்டையை நாம் வெறும் களைச்செடி என்று நினைத்து கடந்து சென்றுவிடுவோம். மூக்கிரட்டை Hog weed என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
சாதாரணமாக கிராமங்களில் ஆங்காங்கு தோட்டங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து பரவலாக காணப்படும் ஒருவகை செடி தான் இந்த மூக்கிரட்டைச் செடி
இதன் தாவரவியல் பெயர் போயர்ஃஹேவியா டெஃபியூசா (Boerhavia diffusa) எனப்படுகிறது. இதன் குடும்பம்
நிக்டாஜினேசி (Nyctaginaceae). இந்த செடி இந்தியா, இலங்கை, ஐரோப்பா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக வளர்ந்து காணப்படுகிறது.
மூக்கிரட்டையில் கிளைகோஸைடுகள், பல்வேறு அமினோ அமிலங்கள், அல்கலாய்டுகள் மற்றும் புரதம் ஆகிய வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.
மூக்கிரட்டையின் மருத்துவ பயன்கள்
மூக்கிரட்டையின் இலைகளில் பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.
மூக்கிரட்டைச் செடிக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் சேகரமாகும் கழிவுகளை முழுவதுமாக அகற்றி வெளியேற்றிவிடும். இதனால் உடல் ஆரோக்யம் பேணப்படுகிறது.
மூக்கிரட்டை உடலில் சேரும்போது உடலில் வாதநோய்கள் அடங்கிப்போகும் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் கழிவுகள் சேராது.
மூக்கிரட்டையை பயன்படுத்துவதால் இரத்த சோகையால் உண்டாகும் உடல் வீக்கம், மூச்சுத்தி திணறல் ஆகியவை அகலும். கல்லீரல் பாதித்தவர்கள், மஞ்சள் காமாலை பாதித்தவர்களில் ஏற்படும் வயிற்று உப்புசம் குறைந்து உடலில் சேரும் நச்சு நீர் போன்றவைகளை வெளியேற்றிவிடும்.
புற்று நோய் ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மூக்கிரட்டைக்கு உள்ளது.பொதுவான தொற்று வியாதிகளின் பாதிப்பையம் சரி செய்துவிடும். உடல் திசுக்களை சரி செய்து முதுமைத் தன்மையை நீக்கி, உடல் இளமையாகத் தோன்றும் நிலையை உருவாக்கும்.
மூக்கிரட்டை பயன்பாட்டால் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் உடல் சுறுசுறுப்புடனும், மனம் உற்சாகமாகவும் திகழும்.
சிறிதளவு மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை மற்றும் கீழாநெல்லி இலை ஆகியவைகளை சம அளவில் எடுத்து, அதை நன்றாக அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், கண்பார்வை குறைவானவர்களுக்கு பார்வை தெளிவு பெறுவதுடன் மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகும்.
மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து, உடல் பொலிவு பெறும்.
மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வு பெறும். இளமைப்பொலிவான தோற்றம் உண்டாகும்.
மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சீராகும். மூக்கிரட்டை வேர் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இந்த கிழங்கு இரத்தச் சோகை, இதய பாதிப்பு போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
மூக்கிரட்டை வேரை நீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு அந்த நீரை ஆற வைத்து குடித்து வந்தால் இரத்த சோகை, சளித் தொல்லை எல்லாம் நீங்கிவிடும்.
மூக்கிரட்டை வேர்களை லேசாக இடித்து, விளக்கெண்ணையில் போட்டு நன்றாக காய்ச்சி எடுக்கவேண்டும். அந்த எண்ணெயை, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம் உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்கழிவுகள், நச்சுக்கிருமிகள் எல்லாம் மலத்துடன் வெளியேறி விடும். இந்த நச்சுக்கள் வெளியேற்றத்தால் உடலில் ஏற்பட்டிருந்த சரும நோய்கள், அரிப்பு மற்றும் வாதம் போன்ற நோய்கள் பறந்து ஓடிவிடும்.
உணவின் மூலமாகவோ அலலது வேறு ஏதாவது பாதிப்பினாலோ உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உடலில் ஒருவிதமான அரிப்பு ஏற்படும். இதனால், எப்போதும்,சொரிந்துகொண்டே இருக்கும் நிலை ஏற்படும். சூழல் அறியாது எந்த இடத்திலும் சொரியும் நிலை ஏற்படும்.
இது மனதில் பெரும் வேதனையை உண்டாக்கும். இதைப்போன்ற அரிப்பு நீங்க நன்கு உலர வைக்கப்பட்ட மூக்கிரட்டை வேரை இடித்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சு அந்த நீரை ஆற வைக்கவேண்டும். ஆறியவுடன் அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு நீங்கி சருமம் பொலிவு பெறும்.
சிறுநீரகங்களின் பாதிப்புகளால் இரத்தத்தில் நச்சுக்கள் கலந்துவிடும். இதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு முற்றிலும் செயல் இழக்கும் அபாய நிலை உண்டாகலாம். அந்த பாதிப்புக்கு சிறிதளவு மூக்கிரட்டை வேர், சிறிதளவு சோம்பு ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து காய்ச்சி எடுக்கவேண்டும். அதை ஆற வைத்து தினமும் குடித்துவந்தால் சிறுநீரகங்கள் பக்க விளைவுகள் நீங்கி, பாதிப்புகள் மெல்ல விலகிப்போகும். அதன்மூலம் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீரகத்தைக் காக்கும். மேலும் இந்த நீர் சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் பெற்றது.
மூக்கிரட்டை வேரை பொடியாக்கி அதை தினமும் இரண்டு வேளை சிறிதளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வை மங்கல் நீங்கும். மேலும் மாலைக்கண் பாதிப்புகளையும் நீக்கிவிடும்.