பெருந்துறையைச் சேர்ந்த பெண் அருள்மணி என்பவர் ஒருங்கிணைந்த உளவியல் மற்றும் நரம்பியல் சிகிச்சை முடிந்து அவரது குடும்பத்துடன் (21.2.2022) அனுப்பி வைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில்அருள்மணி(53). என்பவர் 5 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஒருங்கிணைந்த மனநல சிகிச்சைகள் வழங்கப்பட்டது.மேலும் அவருக்கு உணவு, மற்றும் உடை, குளியல் சோப் உள்ளிட்ட சுய தேவை பொருட்கள் கொடுத்து தங்குவதற்கு பாதுகப்பான இடம் வழங்கப்பட்டது.
பின்னர் தீவிர நரம்பியல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் சேர்க்கப்பட்டார்.
மன நல மருத்துவர் தெய்வநாயகம் குழுவினர் அளித்த சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்த அப்பெண்மணியின் முகவரி கண்டுபிடிக்கபட்டு அவர்களுக்கு தகவல் அளிக்கப் பட்டது. பின்னர் அருள்மணியின் மகள்.சத்தியா தேவி மற்றும் பாக்கியம் ஆகியோர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மையத்துக்கு வந்து தனது தாய் அருள்மணியை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள் மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் அருள்மணி அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.