இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளையில் மருத்துவ மனை பதிவு சான்று வழங்கும் விழா மற்றும் தொடர் மருத்துவக் கல்வி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கத்தில் மருத்துவமனை களுக்கு பதிவுச் சான்று வழங்கும் விழா மற்றும் தொடர் மருத்துவக் கல்வி முகாம் கிளைத் தலைவர் மருத்துவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ராமு கலந்து கொண்டு சிறிய மற்றும் பெரிய மருத்துவமனை, செயற்கை கருத்தரிப்பு மையம் ஆகியவற்றுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் முக்கியத்துவத்தும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து கிளை கிளை மருத்துவஉறுப்பினர்களுக்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் நிபுணர் சரவணவேல் விபத்து மற்றும் வெப்ப காலங்களில் உடலில் குறையும் நீர் மற்றும் உப்புக்களை கண்டறிந்து அதற்கான தற்காலத்தில் உள்ள நவீன சிகிச்சையை திரை மூலம் விளக்கமளித்தார்.
இதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வாத நோய் சிறப்பு மருத்துவர் நிபுணர் கார்த்திகேயன் ஆரம்பநிலையில் வாதங்களை கண்டறியும் முறையையும் அதற்குண்டான தற்கால சிகிச்சை முறையையும் விளக்கிப்பேசினார்.
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க நிறைவாக கிளை முன்னாள் நிர்வாகிகள் மூத்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் மருத்துவர் முகம்மது சுல்தான் வரவேற்றார். நிதிச் செயலாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.