Close
செப்டம்பர் 19, 2024 11:08 மணி

புதுக்கோட்டையில் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட இஎன்டி மருத்துவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

புதுக்கோட்டையில் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டையில் காது மூக்கு தொண்டை  மருத்துவர்கள் சங்கத்தினர்    பதவியேற்பு விழா எம். ஏ. கிராண்ட் அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு, டாக்டர் ஞானத்திலகன் தலைமை  வகித்தார்.   டாக்டர் ஜேசுதாஸ்  வரவேற்றார்.

காது மூக்கு தொண்டை  மருத்துவர் சங்கத்தின் புதுக்கோட்டை  மாவட்ட கிளையின் சங்கத் தலைவராக பேராசிரியர் டாக்டர் ரவீந்திரன் , செயலராக  டாக்டர் ஆறுமுகம் , பொருளாளராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றனர்.

நிகிழ்வில்  காது அறுவை சிகிச்சைக்கான தொடர் மருத்துவப் பயிலரங்கம் துணைப் பேராசிரியர் டாக்டர் ராஜகணேஷ்  தொகுத்து வழங்கினார்.

அனைத்து காது மூக்கு தொண்டை மருத்துவர்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த  டாக்டர் இராமநாதன், டாக்டர் குத்தூஸ், டாக்டர் தையல்நாயகி, டாக்டர் இந்திராணி ஆகியோரும் கலந்து  கொண்டனர்.  நிறைவாக  டாக்டர் ஆறுமுகம் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top